கடலுார் மாவட்ட கோவில்களில் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பூஜை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2021
05:11

கடலுார்; தமிழ்ப் புத்தாண்டை யொட்டி கடலுார் மாவட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை விஸ்வரூப தரிசனம் தொடர்ந்து திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.பாடலீஸ்வரர் கோவிலில் பாடலீஸ்வரர், பெரிய நாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. விநாயகர், முருகன், மகாலட்சுமி, துர்கையம்மன், பிடாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.அதேபோன்று, திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள், மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜ பெருமாள், விஸ்வநாதீஸ்வரர் கோவில், செம்மண்டலம் சாந்த ஆஞ்சநேயர், காராமணிக்குப்பம் அடுத்த குணமங்கலத்தில் லட்சுமி நாராயண பெருமாள் கோவில், வண்டிப்பாளையம் சுப்ரமணியர் கோவில், புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார், முதுநகர் ஐந்து கிணற்றம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.மேலும், நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவில், மேல்பட்டாம்பாக்கம் சிவலோகநாதர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.திட்டக்குடியில், வதிட்டபுரம் அரங்கநாத பெருமாள் கோவிலில் காலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.இதேபோன்று, காட்டுமன்னார்கோவிலில் அனந்தீஸ்வரர் கோவில், வீரநாராயண பெருமாள் கோவில், ஞானவிநாயகர் கோவில், மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.விருத்தாசலம்விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர்.மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது. மாலை சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X