குழுக்கள்: நெறிமுறை பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க...தொற்று பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2021
05:12

கடலுார்; கொரோனா தொற்று இரண்டாவது அலை தீவிரம் உணராமல் மக்கள் அலட்சியம் காட்டுவதால், மாவட்டத்தில் அரசின் நெறிமுறைகளை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.



கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை கடந்த 1ம் தேதி முதல் கிடுகிடு வென அதிகரிக்கத் துவங்கி, இரண்டு வாரத்தில் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 294 பேர் உயிரிழந்துள்ளனர்.ஆனாலும், பொதுமக்கள் பெரும்பாலும் முகக் கவசம் அணிவதில்லை, சமூக இடைவெளி கடைபிடிப்பதில்லை, கூட்டம் கூட்டமாக பொழுது போக்கு இடங்களில் கூடுவது என மக்கள் அலட்சியம் தொடர்கிறது.மின்னல் வேகத்தில் தொற்று பரவுவதால், காய்ச்சல் முகாம்களை அதிகரிப்பது, தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துவது என, நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.மேலும், மாவட்டம் முழுதும் சிகிச்சை மையங்களை தயார்படுத்தி வருகிறது. மருத்துவமனைகள் மட்டுமின்றி, கல்வி நிறுவனங்களும் தயார்படுத்தப்பட்டு வருகிறது. 2,600 படுக்கை வசதிகளுடன் தற்போது சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் உள்ளன.இந்நிலையில், கலெக்டர் சந்திரசேகர சகாமுரி, பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:மாவட்ட நிர்வாகம் கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது



. நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் விதி மீறல் நபர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.இருப்பினும் பொதுமக்கள் மார்க்கெட், வணிக வளாகங்கள், மொத்தம் மற்றும் சில்லறை நிறுவனங்களில் அதிகமாக கூடுவதற்கு வாய்ப்புள்ளதாலும் அதனால், கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பதைத் தடுக்கும் பொருட்டு, அரசின் நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது



.நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மாவட்டத்தின் எந்த பகுதிகளிலும் திடீர் ஆய்வு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளலாம். குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான கடைத்தெருக்கள், இறைச்சிக் கடைகள், காய்கறி சந்தைகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதமும், எச்சில் துப்பினால் 500 ரூபாயும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு 500 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.



அரசால் வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு 5,000 ரூபாயும், கட்டுப்பாட்டு மையங்களில் விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என, தெரிவித்தார்.ஆனால், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே மாவட்டத்தில் கொரோனா தொற்று மேலும் பரவாமல் கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் அதிகாரிகள்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X