சேதமடைந்த அரசு மருத்துவமனை சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பீதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2021
05:39

செங்குன்றம்- அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மகப்பேறு மருத்துவம் மற்றும் பொது உடல் நலம் பாதிப்புகளுக்காக சிகிச்சை பெற செல்வோர், கட்டடம் சேதமடைந்துள்ளதால், பீதியடைகின்றனர்.சென்னை, செங்குன்றத்தில், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. செங்குன்றம், புள்ளிலைன், தீர்த்தகிரையம்பட்டு, வடகரை என சுற்றுவட்டாரங்களில் வசிப்போர், மகப்பேறு மருத்துவம் மற்றும் பொது சிகிச்சைகளுக்காக, இங்கு வந்து செல்வர்.கடந்த, 10 ஆண்டுக்கு முன், மகப்பேறு மருத்துவத்தில் சிறந்த சேவைக்கான, தமிழக அரசின் பரிசும், இந்த மருத்துவமனைக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.தற்போது, இங்கு, மற்ற சிகிச்சைகளுடன் கொரோனா தடுப்பு ஊசியும், தகுதியானவர்களுக்கு செலுத்தப்படுகிறது. இந்நிலையில், அங்கு சிகிச்சைக்காக செல்வோர், மருத்துவமனையின் பராமரிப்பு மோசமாக உள்ளதாக, ஆதங்கப்படுகின்றனர்.அங்கு குவியும் குப்பையை, பேரூராட்சியின் துப்புரவு பணியாளர்கள் அகற்றுவதில்லை. அங்குள்ள சில பணியாளர்கள், இயன்ற வரை, துாய்மை பணியை செய்கின்றனர். ஆனாலும், மரங்களின் இலை குப்பை கழிவுகள் குவிந்துள்ளன.கொரோனா காலத்திலும், மருத்துவமனை வளாகத்தை, சுத்தம் செய்து,'பிளீச்சிங் பவுடர்' போடுவது மற்றும் நோயாளிகளுக்கு கிருமி நாசினி வழங்குவது போன்ற சுகாதார நடவடிக்கை ஏதும் இல்லை.அனைத்திற்கும் மேலாக, கர்ப்பிணி உள்ளிட்ட வயது முதிர்ந்த நோயாளிகள் அச்சத்திற்கு ஆளாகி, வெளியேறும் நிலை உருவாகி உள்ளது. அங்குள்ள, 24 மணி நேர சிகிச்சை மையம், மகப்பேறு மருத்துவ சிகிச்சைக்கான பிரசவ வார்டுகளின் கட்டடம், மிக மோசமாக சேதமடைந்துள்ளது.மேம்படுத்தப்பட்ட மற்றொரு கட்டடத்தின் நடைபாதை, மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், முதியோரின் உதவிக்காக அமைக்கப்பட்ட, 'ஸ்டீல்' கைப்பிடி ஆகியவையும் சேதமடைந்துள்ளன.கடந்த, 15 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட இந்த கட்டடங்கள், மழை பெய்தால் கூரை வீடு போல், உள்ளே தண்ணீர் பாய்கிறது. இதனால், கட்டடம் சேதமடைந்து, சிமென்ட் தளங்கள் பெயர்ந்து கீழே விழுகின்றன.கட்டடத்தின் துாண்க ளும் உறுதியிழந்து, விரிசல் கண்டுள்ளன. இதனால், கர்ப்பிணி மற்றும் பிற நோயாளிகள் அந்த கட்டடத்திற்குள், செல்லவே அஞ்சுகின்றனர். அதனால், கர்ப்பிணிகள் மற்றொரு கட்டடத்திற்கு மாற்றப்படுகின்றனர்.அவற்றில், மருத்துவ மனை ஊழியர்களே செல்ல அச்சப்படுகின்றனர். ஆனாலும், நோயாளிகளுக்கான கட்டில், மெத்தை, மேஜை உள்ளிட்ட, பொருட்கள் அங்கு வைக்கப்பட்டு உள்ளன.தளத்தில் ஏற்பட்டுள்ள விரிசலால், மழை நீர் கசிந்து, மின் இணைப்புகளும் சேதமடைந்து, மின் கசிவு ஏற்பட்டது. இதனால், மருத்துவர் மற்றும் பணியாளர்கள் அச்சமடைந்தனர்.இந்நிலையில், சேதமடைந்த மின் இணைப்புகளை, உள்ளூரை சேர்ந்த சிலர், சீரமைத்து கொடுத்துள்ளனர். தினமும், 80 முதல் 100 பேர் வரை, சிகிச்சைக்காக வந்து செல்லும், மருத்துவமனையின் நிலை பரிதாபமாக உள்ளது. ஆனாலும், தாராள இடவசதி கொண்ட இந்த மருத்துவமனை, பொருளாதார ரீதியாக, உரிய பராமரிப்பின்றி, குக்கிராமங்களில் பயன்படுத்தாமல் பாழடையும், சுகாதார மையங்களை போன்று, மாறி வருகிறது.திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை, இந்த மருத்துவமனையை சீரமைத்தால், சுற்றுவட்டாரங்களுக்கான, அரசு பொது மருத்துவமனையாக வளர்ச்சி பெறும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X