ஏரி சாலையில் தேங்கும் மழை நீரால் அவதி | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
ஏரி சாலையில் தேங்கும் மழை நீரால் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஏப்
2021
00:25

கொடைக்கானல் : கொடைக்கானலில் தொடர் மழையால் ஏரி சாலையில் தேங்கிய தண்ணீரால் பயணிகள் அவதிப்பட்டனர்.



கொடைக்கானல் சுற்றுலா தலத்தில் முக்கியமானது ஏரி. இதை சுற்றியுள்ள ரோட்டில் சுற்றுலா பயணிகள் குதிரை, சைக்கிள் சவாரி, நடை பயணம் மேற்கொள்கின்றனர். இப்பகுதியில் உள்ள பிரதான ரோடு நெடுஞ்சாலைத்துறை வசம் உள்ளது. இருப்பினும் ஏரி முழுமையும் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. ஏரியின் நீர் மட்டத்திற்கும் தாழ்வாக ரோடு உள்ளதால் மழை நீர் வடிந்தோட வழியில்லாமல் ரோட்டில் தேங்குகிறது. அவ்வபோது வர்த்தக கடைகளுக்குள் தண்ணீர் செல்கிறது. பிரையன்ட் பூங்கா, படகு குழாம் செல்லும் வாகனங்கள் மழைக்காலத்தில் தண்ணீரில் நீந்தி செல்லும் நிலை உள்ளது. நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை ரோட்டில் தேங்கும் தண்ணீரை வடிந்தோட செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X