போலீஸ் டைரி: நகை திருட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2021
02:08

கோவில்பாளையம் அருகே, வெள்ளானைப்பட்டி, விசாகா நகரைச் சேர்ந்தவர் பரமசிவம்; கட்டுமானத் தொழில் செய்து வருகிறார். இவர், காலையில் பணிக்கு சென்றுவிட்டு, மதியம் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவின் பூட்டும் உடைக்கப்பட்டு, உள்ளே வைத்திருந்த ஆறரை சவரன் நகை திருட்டு போயிருந்தது. கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.தற்கொலை: நீலகிரி மாவட்டம், குன்னூர் அடுத்த மேலூரில் உள்ள ஊராடாவில் அன்னை இல்லத்தை சேர்ந்தவர் கணேசன், 27; மனைவி ரேணுகா. கணேசன் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், சென்னை சுமித் ஹவுஸ் கீப்பிங் தனியார் கம்பெனி மேலாளராக, கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவர், கடந்த, 13ம் தேதி மாலை, அரசு மருத்துவமனை வளாகத்தில், வாந்தி எடுத்து நிலையில் மயங்கி கிடந்தார். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, விஷம் குடித்தது தெரிய வந்தது. உடனடியாக முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, கணேசன் இறந்தார். மேட்டுப்பாளையம் போலீசார், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.விபத்துகளில் இருவர் பலி: *பெரியநாயக்கன்பாளையம் அடுத்த, மத்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் கணபதி, 52. இவர், சின்னமத்தம்பாளையம், விநாயகர் கோவில் அருகே நடந்து வந்தபோது, அந்த வழியாக வேகமாக வந்த கார், கணபதி மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த கணபதி, அதே இடத்தில் இறந்தார். சம்பவம் தொடர்பாக, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். *மேட்டுப்பாளையம், சிறுமுகை அருகே உள்ள அண்ணா நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி, 43. இவர் சத்தியமங்கலம் அருகே டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வந்தவர். நேற்றுமுன்தினம் துடியலுாரில் இருந்து இருசக்கர வாகனத்தில், வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், மூர்த்திக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, இறந்தார். துடியலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.பெண் தற்கொலை: மேட்டுப்பாளையம், சிறுமுகை சாலையில் உள்ள, அறிவொளி நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ்; மனைவி ரேணுகாதேவி, 27. இவர்களுக்கு திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை, 6:00 மணிக்கு கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வெறுப்படைந்த ரேணுகாதேவி, வீட்டில் கதவை தாழ் போட்டு, மின் விசிறியில் நைலான் சேலையால் தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார். மேட்டுப்பாளையம் போலீசார், வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.தனிப்படை அமைப்பு: அன்னுார், மேட்டுப்பாளையம் ரோட்டில், சிட்டி யூனியன் வங்கி கிளையும், ஏ.டி.எம்., மையமும் உள்ளது. இம்மையத்தில், நேற்று முன்தினம் அதிகாலையில் புகுந்த மர்மநபர் ஏ.டி.எம்.,மை சேதப்படுத்தி, திருட முயற்சித்து, பணம் கிடைக்காததால் தப்பிச் சென்றுவிட்டார்.இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியைப் பிடிக்க, கோவை ரூரல் போலீஸ் எஸ்.பி., செல்வ நாகரத்தினம் வழிகாட்டலில், மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ் தலைமையில், எஸ்.ஐ., செந்தில்குமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.இத்தனிப்படையினர், வங்கி ஏ.டி.எம்., மையத்தில் பொருத்தப்பட்டுள்ள, கண்காணிப்பு கேமரா, மேட்டுப்பாளையம் ரோடு, பஸ் ஸ்டாண்ட், கைகாட்டி ஆகிய இடங்களில் உள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X