தடுப்பு கட்டை மீது கார் மோதியதில் பெண் பலி | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
தடுப்பு கட்டை மீது கார் மோதியதில் பெண் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஏப்
2021
04:14

விழுப்புரம்; புதுச்சேரி - சென்னை நோக்கி சென்ற கார் கிளியனுார் அருகே தடுப்பு கட்டை மீது மோதிய விபத்தில் பெண் இறந்தார்.புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த மேலவாஞ்சூரை சேர்ந்தவர் நடராஜன் மனைவி அபிராம்சுந்தரி,42; இவரும், இவரது உறவினர்கள் தியாகராஜன் மனைவி கிளியாஸ்மேரி,52; மகன் ஆனந்த்,22; ராஜேந்திரன் மகன் சத்தியபாலு,33; ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.00 மணிக்கு புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி, பி.ஓய்.,02 டி9797 பதிவெண் கொண்ட காரில் சென்றனர். காரை மேலவாஞ்சூரை சேர்ந்த மனோஜ்குமார்,42; ஓட்டி சென்றார்.எடையான்குளம் கிராமம் அருகே வந்த போது, சாலையின் குறுக்கே மாடு வந்ததால் டிரைவர் பிரேக் போட்டதால் கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த தடுப்பு கட்டையில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அபிராமசுந்தரி உட்பட நான்கு பேரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், அபிராமசுந்தரி சிகிச்சை பலனின்றி இறந்தார். கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X