திண்டிவனம் ஓட்டு எண்ணும் மையத்தில் பரபரபபு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
திண்டிவனம் ஓட்டு எண்ணும் மையத்தில் பரபரபபு
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஏப்
2021
04:19

திண்டிவனம்; திண்டிவனத்தில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள அண்ணா பொறியியல் கல்லுாரி வளாகத்தில் ஆன்லைன் தேர்வு நடத்துவற்காக பேராசிரியர்கள் வருவதற்கு, தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திண்டிவனத்திலுள்ள அண்ணா பொறியியல் கல்லுாரி வளாகத்தில், திண்டிவனம் மற்றும் மயிலம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 6ம் தேதி நடந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் அங்குள்ள ஸ்ட்ராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்லுாரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஸ்ட்ராங் ரூமிற்கு அருகிலுள்ள வளாகத்தில் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை செய்வதற்காக நேற்று காலை வந்திருந்தனர். இதற்கு திண்டிவனம், மயிலம் தொகுதி தி.மு.க,,வேட்பாளர்களின் முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு திண்டிவனம் சப்கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலரான அனு மற்றும் டவுன் டி.எஸ்.பி.,கணசேன் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்தனர். சப்கலெக்டரிடம், ஸ்ட்ராங் ரூமிற்கு அருகிலேயே ஆன்லைன் வகுப்புகள் நடத்தினால் பிரச்னை ஏற்படும். இதனால் கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தே பாடங்கள் நடத்தியது போல் தற்போதும் வீட்டிலிருந்தே நடத்த வேண்டும். ஸ்டாரங் ரூமிற்கு அருகில் எந்த வித பாடங்களும் நடத்த கூடாது என்று தி.மு.க.,தரப்பில் முறையிட்டனர்.இதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திடம் சப்கலெக்டர், ''பல்கலைக்கழக வளாகம் தேர்தல் ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ளதால், ஸ்ட்ராங் ரூமிற்கு அருகில் பேராசிரியர்கள், ஊழியர்கள் செல்லவேண்டாம். ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறும் இடத்தை மாவட்ட கலெக்டரிடம் முன் அனுமதி பெற்று அதன் பிறகு நடத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதியில், ஊழியர்கள், பேராசிரியர்கள் அடையாள அட்டையை காண்பித்த பிறகே செல்ல வேண்டும்'' என்று அறிவுருத்தினர்.சப்கலெக்டர் கூறிய தகவலின் அடிப்படையில், ஓட்டு எண்ணும் மையத்திலிருந்த தி.மு.க.,நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X