டார்கெட்: முக கவசம், வாகன வழக்கு போடுவதற்கு... ரசீது புத்தகத்துடன் திரியும் மாவட்ட போலீசார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2021
04:21

விழுப்புரம் மாவட்டத்தில் முக கவசம் மற்றும் மோட்டார் வாகன வழக்கு பதிவு செய்ய டார்க்கெட் கொடுக்கப்பட்டுள்ளதால், ரசீது புத்தகம் மற்றும் மின்னணு இயந்திரங்களுடன் போலீசார் திரிந்து வருகின்றனர்.



இது, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் அதிகரித்துள்ள வாகன எண்ணிக்கையால், நாளுக்கு நாள் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றது. இதை தடுக்க மோட்டார் வாகன விதிமுறைகளில் பல்வேறு கிடுக்கிப்பிடி நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.சாலை விபத்து மற்றும் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கும் வகையில், இருசக்கர வாகனங்களில் ெஹல்மெட் அணியாமல் செல்பவர்கள் மற்றும் கார்களில் சீட் பெல்ட் போடாமல் செல்பவர்கள் மீது வழக்குப் பதிந்து போலீசார் அபராதம் வசூலிக்கின்றனர்.இதேபோன்று, ஓவர் ஸ்பீடு, ஓவர் லோடு, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், மொபைல் டிரைவிங், சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிச்செல்வது, சிவப்பு விளக்குளை மீறி செல்வது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல் வழக்குகளும் பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்படுகின்றது.இந்நிலையில், கொரோனா பாதிப்பு ஊரடங்கால் கடந்த ஆண்டு முழுவதும் பொதுமக்கள், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கட்டுப்பாடுகள் இதையடுத்து சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வால், பொதுமக்கள் சகஜ நிலைக்கு திரும்பினர்.



ஆனால், கொரோனா இரண்டாவது அலை காரணமாக, தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறும் நபர்கள் மீது வழக்குப் பதிந்து, அபராதம் வசூலிக்கவும் நகராட்சி, சுகாதாரத்துறை, காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்பேரில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தினந்தோறும் மோட்டார் வாகன வழக்குகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முககவசம் அணியாமல் செல்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய டார்கெட் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, நகரங்களில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு, முக கவச வழக்குகள் தினந்தோறும் தலா 70 பதிவு செய்யவும், கிராமப்புற போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தலா 50 பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோன்று, மோட்டார் வாகன வழக்குகள் நகர போலீஸ் நிலையங்களுக்கு தலா 120 மற்றும் கிராமப்புற போலீஸ் நிலையங்களுக்கு 70 முதல் 80 வழக்குகள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.



அபராதம்



அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள போலீசார் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் முக்கிய சாலைகளில் ரசீது புத்தகம் மற்றும் மின்னணு இயந்திரத்தை கையில் வைத்துக்கொண்டு திரிகின்றனர். அப்போது, முக கவசம் அல்லது ெஹல்மெட் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளை மடக்குகின்றனர். இதில், முகக்கவசம் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் ரசீது புத்தகத்திலும், மோட்டார் வாகன வழக்குகளை மின்னணு இயந்திரத்திலும் பதிவு செய்து அபராதம் வசூலிக்கின்றனர்.



இந்த இலக்கை முடிக்க வேண்டும் என தினந்தோறும் போலீஸ் அதிகாரிகள், கீழ்மட்ட அதிகாரிகளை வறுத்தெடுக்கின்றனர். இதனால், போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பல இடங்களில் வாக்குவாதங்கள் ஏற்பட்டு வருகின்றது. அதிகாரிகளின் இந்த உத்தரவு போலீசார் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


-நமது சிறப்பு நிருபர்-


 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X