கிரைம் செய்திகள்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2021
04:34

13 பேர் மீது வழக்குவிருத்தாசலம்: தே.பவழங்குடியைச் சேர்ந்தவர் நமச்சிவாயம், 32; கீரமங்கலத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன், 40; இருவருக்கும் இடையே தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 26ம் தேதி, விருத்தாசலம் தெப்பக்குளம் அருகே, நமச்சிவாயம், கலைச்செல்வன் ஆதரவாளர்கள் திட்டி, தாக்கிக் கொண்டனர்.

இருதரப்பு புகாரின் பேரில், நமச்சிவாயம், கலைச்செல்வன் உட்பட 13 பேர் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.மகள் மாயம்: தாய் புகார்பண்ருட்டி: பெரிய காட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் சரண்யா, 22; இவரை கடந்த 13ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் தனவள்ளி, 42; கொடுத்த புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.சிறுமி விஷம் குடித்து தற்கொலைபெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த கோவிலுரைச் சேர்ந்தவர் வீரப்பன் மகள் அன்புச்செல்வி, 9; மனநிலை பாதிக்கப்பட்டவர். கடந்த 13ம் தேதி, வீரப்பன், அவரது மனைவி இருவரும் கூலி வேலைக்குச் சென்றிருந்தனர். இரவு வந்து பார்த்தபோது, அன்புச்செல்வி எலிபேஸ்ட் சாப்பிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.உடன் அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை இறந்தார். பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.மனைவி மாயம்: கணவர் புகார்விருத்தாசலம்: ஆலடி அடுத்த மோகாம்பரிக்குப்பத்தைச் சேர்ந்தவர் சதாசிவம், 35, இவரது மனைவி முருகேஸ்வரி, 32; இவர், கடந்த பிப்ரவரி 22ம் தேதி தனது மகள் தர்ஷினி, 10; தினேஷ், 5; ஆகியோருடன் விருத்தாசலம் சென்று வருவதாகக் கூறி, வீட்டை விட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில்தேடியும் கிடைக்கவில்லை.சதாசிவம் கொடுத்த புகாரின் பேரில், ஆலடி போலீசார் விசாரிக்கின்றனர்.ஆபாச பேச்சு: 12 பேர் மீது வழக்குபுவனகிரி: புவனகிரி போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். புவனகிரி கடைவீதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக நின்று கொண்டு, ஆபாசமாக திட்டி கொண்டிருந்த சிதம்பரம், வடகரையைச் சேர்ந்த குருமூர்த்தி, 39; சின்னான், 36; மற்றும் ஆதிவராகநத்தத்தில் பரங்கிப்பேட்டை, அகரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த பாரதி, 25; முருகன், 21; பிரகாஷ், 21; சதீஷ்குமார், 26; மோகன், 60; தெற்கு தெருவைச் சேர்ந்த பாவாடைசாமி, 44; மும்மூர்த்தி, 68; மற்றும் சேத்தியாத்தோப்பு அள்ளூரைச் சேர்ந்த பரசுராமன், 24; ஆகிய 8 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.மேலும், பெருமாத்துார் டாஸ்மாக் கடையில் தகராறு செய்த சுத்துக்குழி காளிமுத்து, 36; பூதவராயன் பேட்டை பழனியப்பன், 40; இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.வாகனம் மோதி ஒருவர் சாவுபண்ருட்டி: கொள்ளுக்காரன்குட்டை மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி வி.கே.டி., தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 13ம் தேதி இரவு வடலுாரில் இருந்து பண்ருட்டி நோக்கிச் சென்ற காரின் பின்னால் வந்த பைக் மோதியதில் பைக்கில் சென்ற 45 வயது மதிக்கதக்க நபர் படுகாயமடைந்தார். உடன், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர், அங்கு நேற்று முன்தினம் இறந்தார். முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து இறந்தவர் யார் என விசாரித்து வருகின்றனர்.வாலிபருக்கு கத்திவெட்டுபுதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த புத்திரவல்லியைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் ராஜி, 16; இவர் நேற்று முன்தினம் அய்யம்பேட்டை பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஆண்டார்முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த சுனில், தமிழ், வெற்றி, இளங்கீரன் நால்வரும் மாட்டின் மேல் இடிப்பது போல் பைக்கை ஓட்டி வந்தனர். இதனை ராஜி தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த நால்வரும் ராஜியை தாக்கி கத்தியால் வெட்டினர்.புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து சுனில், தமிழ் உட்பட 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X