சின்னமனூர் நகராட்சியில் குடிநீர் கட்டணம் 100 சதவீதம் உயர்வு: பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2021
07:35

சின்னமனுார், : சின்னமனுாரில் 100 சதவீதம் உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணம் ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு பொதுமக்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.



சின்னமனுார் நகராட்சியில் 70 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு 8600 வீட்டு குடிநீர் இணைப்புகள் உள்ளன. ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. நகராட்சி முல்லைப்பெரியாற்றில் பம்பிங் ஸ்டேஷன் அமைத்து குடிநீர் வினியோகிக்கிறது. குடிநீர் கட்டணம்மாதம் ரூ. 60 வீதம், 3 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 180 வசூலித்தது. திடீரென குடிநீர் கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்தியுள்ளது. ஏப்ரல் முதல் புதிய கட்டண உயர்வு அமல்படுத்தியது.கட்டண உயர்விற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



பரிசீலிக்கலாம்



வி. டி. ஞானசுந்தரம்,தலைவர், நகர் முன்னேற்றசங்கம்: அத்தியாவசியமான குடிநீர் கட்டணம் மாதம் ரூ. 60க்கு பதில் ரூ. 120 உயர்ந்துள்ளது. 3மாதத்திற்கு பிற கட்டணங்களுடன் ரூ. 390 ஆக உயர்த்தியது கண்டிக்கத்தக்கது. கொரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. கட்டண உயர்வு அவசியம் எனில் 25 முதல் 50 சதவீதம் உயர்த்தலாம். அதைவிட்டு ஒரே நேரத்தில் 100 சதவீத உயர்வு கடுமையாக பாதிக்கும். கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.



திரும்ப பெற வேண்டும்



சி.ஆர்.பாலசுப்ரமணியன், சமூக ஆர்வலர்:பிற நகராட்சிகளில் கட்டணம் உயர்வு இந்தளவு இல்லை. கம்பத்தில் மாத கட்டணம் ரூ. 91. இங்கு 100 சதவீதம் உயர்த்தி ரூ. 390 வசூலிப்பது அதிகமாகும். பொதுமக்களை பாதிக்கும். மக்களுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கி கருத்து கேட்டு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.



ஒத்துழைக்க வேண்டும்



நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,' நகரில் தினமும் 50 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. பாதாள சாக்கடை இணைப்பு உள்ளதால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் சப்ளை செய்ய வேண்டும் 250 குதிரை திறன் மோட்டார்கள் 24 மணி நேரமும் பம்பிங் செய்கிறது. மின்கட்டணமாக லட்சக்கணக்கில் செலுத்த வேண்டியுள்ளது. வேறுவழியின்றி கட்டண உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றனர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X