சுகாதார நிலையம் மாறியதால் அவதி | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
சுகாதார நிலையம் மாறியதால் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 ஏப்
2021
00:27

வடமதுரை: காணப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துடன் புதிதாக இணைக்கப்பட்ட சில கிராம மக்கள் நலத்திட்ட உதவிகள் பெற நீண்ட துாரம் பயணிப்பதால் அவதிப்படுகின்றனர்.காணப்பாடியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உருவாக்கப்பட்டது. இதனுடன் புத்துார், மோர்பட்டி துணை சுகாதார நிலைய பகுதி கிராமங்கள் இணைக்கப்பட்டன. புத்துாருக்கு அய்யலுார் ஆரம்ப சுகாதார நிலையமும், மோர்பட்டிக்கு பிலாத்து ஆரம்ப சுகாதார நிலையமும் சுலபமாக சென்று திரும்ப வசதியான கிராமங்கள்.ஆனால் இவ்விரு பகுதிகளையும் காணப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைத்தனர். இதனால் இங்கு செல்ல 2 பஸ்கள் மாறிச் செல்ல வேண்டும். சிகிச்சை பிரச்னைகளுக்கு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் கர்ப்பிணி பெண்கள் நல உதவிகள், அரசு திட்ட சலுகைகள் பெற அந்தந்த பகுதி சுகாதார நிலையத்திற்கே அவசியம் சென்றாக வேண்டும். இதனால் மோர்பட்டி, புத்துார் பகுதி மக்கள் நீண்ட துாரம் செல்ல வேண்டியிருப்பதால் சிரமப்படுகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X