தீவிரம்: 7 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு தீவிர பாதுகாப்பு | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
தீவிரம்: 7 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு தீவிர பாதுகாப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 ஏப்
2021
00:29

மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் பயன்படுத்திய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ரெட்டியார்சத்திரம் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ளன. மூன்றடுக்கு பாதுகாப்பில் உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கட்சி முகவர்களும் கண்காணித்து வருகின்றனர்.



மே 2 ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.வேட்பாளர்களுக்கு ஓட்டுச்சாவடி வாரியாக பதிவான ஓட்டு விவரம் வழங்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வேட்பாளரும் மேஜைகளுக்கு ஏற்ப முகவர்களை நியமிக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்க முகவர்கள் நியமனத்தில் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.'மெஜாரிட்டி' வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க., -- தி.மு.க.,வினர் 'டம்மி' வேட்பாளர்களையும் களத்தில் இறக்கியுள்ளனர்.



ஓட்டு எண்ணிக்கையின் போது கிடைக்கும் ஓட்டுக்களை குறிக்க, வேட்பாளர்கள் மற்றும் தலைமை முகவர்கள் முன்னிலையில் முகவர்கள் நியமனத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.குறிப்பாக, அனுபவம் வாய்ந்த முகவர்களை நியமிப்பதில் கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில் சில கட்சியினர் முன் கூட்டியே தங்களுக்கான முகவர்கள் பட்டியலை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்து, அடையாள அட்டை பெறும் முயற்சியில் களம் இறங்கியுள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X