இளம் பெண் கொலை வழக்கு சகோதரர்கள் உட்பட மூவர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2021
05:31

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த சிறுவன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.



கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த தேவியானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி மகள் சரஸ்வதி,18; கடந்த 1ம் தேதி இரவு வீரமணி மற்றும் குடும்பத்தினர் வீட்டில் படுத்து துாங்கினார். மறுநாள் அதிகாலை 4:00 மணிக்கு வீரமணி எழுந்து பார்த்தபோது, சரஸ்வதியை காணவில்லை. அவரை தேடியபோது, வீட்டின் அருகே உள்ள கழிவறை பின்புறம் கழுத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.இதுகுறித்து வீரமணி கொடுத்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.



அதில் கிடைத்த தகவலின் பேரில், விழுப்புரம், கிழக்கு மருதுார் பாலத்தின் கீழ் பதுங்கியிருந்த தேவியானந்தல் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் ரங்கசாமி,21; ராஜவேல் மகன் ரவீந்திரன், 26; ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர்.அதில், ரங்கசாமியும், சரஸ்வதியும் காதலித்து வந்ததும், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக ரங்கசாமி, அவரது 16 வயது தம்பி மற்றும் ரவீந்திரன் ஆகிய மூவரும் சேர்ந்து சரஸ்வதியை கொலை செய்ததையும், சரஸ்வதி காதில் இருந்த கம்மலை கழற்றி அடகு வைத்ததையும் ஒப்புக் கொண்டனர். அதன் பேரில், மூவரையும் கைது செய்த போலீசார், ரங்காசாமி , ரவீந்திரன் இருவரையும், விழுப்புரம் மத்திய சிறையிலும், 16 வயது சிறுவனை கடலுார் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X