மூலப்பொருள் விலையேற்றத்தை கட்டுப்படுத்துங்க! மத்திய அரசிடம் மன்றாடுகிறது 'சீமா' | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
மூலப்பொருள் விலையேற்றத்தை கட்டுப்படுத்துங்க! மத்திய அரசிடம் மன்றாடுகிறது 'சீமா'
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

18 ஏப்
2021
04:36
பதிவு செய்த நாள்
ஏப் 17,2021 22:15

கோவை:இரும்பு தாது இறக்குமதி, மூலப்பொருட்கள் பதுக்குவோர் மீது நடவடிக்கை போன்றவற்றால், மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த, மத்திய அரசுக்கு, 'சீமா' கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய பம்ப்செட் நிறுவனங்களின் சந்தை மதிப்பு, ரூ.15 ஆயிரம் கோடி உள்ள நிலையில், கோவை பம்ப்செட் நிறுவனங்களின் பங்களிப்பு, ரூ.6,500 கோடியாக உள்ளது.



கோவையில் ஒரு லட்சம் தொழிலாளர்கள், இத்தொழிலை நம்பியுள்ளனர்.தற்போது பம்ப்செட் நிறுவனங்கள் மூலப்பொருள் விலை ஏற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களில் நடப்பு மூலதனம் பற்றாக்குறை ஏற்பட்டு, திட்டமிட்ட உற்பத்தியை அடைய முடியாமல், நஷ்டத்தில் இயங்குகின்றன.



இதுகுறித்து, தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்(சீமா) தலைவர் கார்த்திக் கூறியுள்ளதாவது: நமது நாட்டில் விற்பனையாகும், 90 சதவீத பம்ப்செட்கள், கோவையில் உள்ள எம்.எஸ்.எம்.இ.,களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. மூலப்பொருட்களின் விலை, 30 சதவீதம் உயர்ந்தும் உற்பத்தி பொருட்களின் விலையை உயர்த்த முடியாமல், இந்நிறுவனங்கள் பெரும் நஷ்டம் அடைகின்றன.



ஸ்டீல், இரும்புத்தாது போன்ற பொருட்கள் இறக்குமதியை மத்திய அரசு அனுமதித்து, ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். மூலப்பொருட்களை பதுக்குவோர், செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தும் ஸ்டீல் உற்பத்தியாளர்கள், வணிகர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.எஸ்.எம்.இ.,களுக்கு, 20 சதவீத நடப்பு மூலதன கடன் வழங்க, வங்கிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X