'கோவாக்சின்' 2வது டோஸ் இல்லாமல் மக்கள் தவிப்பு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
'கோவாக்சின்' 2வது டோஸ் இல்லாமல் மக்கள் தவிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 ஏப்
2021
22:48

கோவை:'கோவாக்சின்' தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இரண்டாவது டோஸ் போட முடியாமல், பலரும் தவிப்புக்கு உள்ளாகின்றனர்.கொரோனா இரண்டாவது அலை, வேகமாக பரவி வருகிறது. பரவாமல் தடுக்கவும், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவும், பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வந்துள்ளனர்.


கோவையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர் நல மையங்களில் இலவசமாக கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில், கட்டணம் பெற்று போடப்படுகிறது.கொரோனா இரண்டாவது அலைக்கு முன், கோவையில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், ஒரு மாத அவகாசத்துக்குபின், அவர்கள் எங்கு தடுப்பூசி போட்டுக்கொண்டனரோ அதே இடத்தில், இரண்டாவது டோஸ் போடச்சென்றனர்.


அங்கு, 'கோவிஷீல்டு மருந்து தான் இருக்கிறது. கோவாக்சின் எப்போது வரும் என தெரியவில்லை' என்று கூறி, திருப்பி அனுப்பினர்.சில தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள், கோவாக்சின் மருந்துகளை இருப்பு வைத்துக் கொண்டே, வி.ஐ.பி.,க்கள் சிபாரிசு பெற்று வரும் நபர்களுக்கு மட்டும், தடுப்பூசி போட்டு வருகின்றன.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X