சுதந்திர போராட்ட தியாகி உடல் நலக்குறைவால் மறைவு | செய்திகள் | Dinamalar
சுதந்திர போராட்ட தியாகி உடல் நலக்குறைவால் மறைவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 ஏப்
2021
23:14

காரைக்காலில் சுதந்திர போராட்ட மூத்த தியாகி ராம சீனிவாசன் உடல் நலக் குறைவால் நேற்று காலமானார்.



புதுச்சேரி மாநிலம் , காரைக்கால் திருப்பட்டினம் எடத்தெரு பகுதியை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி ராமசீனிவாசன், 93; பல்வேறு சுதந்திர போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். இவரது மனைவி இந்திராணி , 80; இவரது மகன் சண்முகம், மகள்கள் சுகுணா, ரஞ்சினா.தியாகி ராமசீனிவாசன் கடந்த ஆண்டு மத்திய அரசின் தாமிரபட்டயம் விருது பெற்றுள்ளார். இதற்காக அப்போதைய கவர்னர் கிரண்பேடி , நேரில் வந்து தியாகிக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதித்திருந்த ராம சீனிவாசன், தலத்தெரு பகுதியில் உள்ள அவரது மகன் சண்முகம் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை 8.30 மணிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு காலமானார்.அவரது உடலுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் துணை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன், தாசில்தார் பெய்யாதமூர்த்தி, போலீசார், அரசியல் கட்சியினர், பொது மக்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அவரது உடல் நேற்று மாலை தளத்தெரு இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X