விவசாயிகளுக்கு வரப்பிரசாதமான 'ஸ்டார்ட் அப்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2021
23:49

விவசாயத்தில் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், அதை விற்பதற்கு, 'கவர்மென்ட் இ-மார்க்கெட் ப்ளேஸ்' என்ற ஒரு மிகப்பெரிய இணையதளத்தை, மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இதன் வாயிலாக, தங்கள் உற்பத்திகளை, விவசாயிகளே அரசு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யலாம்.ஆனால், அது போன்று, வாங்குபவர், விற்பவர்கள் இணையதளம் தோட்டக்கலை உற்பத்தியாளர்களுக்கு இதுவரை இல்லாமல் இருந்து வந்தது. அரசின் தேசிய தோட்டக்கலை வாரியத்தின் கீழ், 'தேசிய நர்சரி போர்ட்டல்' என்ற ஒரு இணையதளத்தை http://nnp.nhb.gov.in/ என்ற முகவரியில், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தில் ஏற்படுத்தியுள்ளது.இதனால், ஒவ்வொரு மாநிலத்திலும், தோட்டக்கலை பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், அவர்களுடைய நர்சரியை இந்த இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். என்னென்ன பொருட்கள் உற்பத்தி செய்கின்றனர், என்ன அளவு என்று குறிப்பிடலாம். செடிகளை, விதைகளை என்ன விலைக்கு விற்கின்றனர்; உற்பத்தி பொருட்களை என்ன விலைக்கு வாங்கவும், விற்கவும் விரும்புகின்றனர் என்று தெரிவிக்கலாம்.விவசாயத்தையே நம்பி இருப்பவர்கள் குறிப்பாக பழங்கள், காய்கறிகள், பூக்கள், வாசனை பொருட்கள், தோட்ட பயிர்கள் உற்பத்தி செய்பவர்களுக்கு இந்த இணையம் மிகவும் பயனுள்ளது. குளிர்பதன கிடங்கு அமைப்பதற்கான திட்டம், தொழில்நுட்ப பரிமாற்ற திட்டம், சந்தை தகவல் திட்டம், தோட்டக்கலை முன்னேற்ற திட்டம், தோட்டக்கலை பயிற்சி நிறுவன விபரங்கள், http://nhb.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ளது.இத்தனை வகைகளா?பழங்களில், 63 வகைகளில், 1013; காய்கறிகளில் 23 வகைகளில், 339; பூக்களில் ஏழு வகைகளில், 118; வாசனை பொருளில், 15 வகைகளில், 226; தோட்டப் பயிர்களில் (காபி, தேயிலை, மிளகு போன்றவை) மூன்று வகைகளில் 46 இனங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.உதாரணமாக, நீங்கள் முந்திரி பருப்பு உற்பத்தி செய்கிறீர்கள் என்றால், ஆண்டுக்கு எவ்வளவு உற்பத்தி செய்கிறீர்கள்; என்ன விலைக்கு, எவ்வளவு அளவு தற்போது விற்பனைக்கு இருக்கிறது என்றும் குறிப்பிடலாம்.உங்களுக்கு என்ன லாபம்?இதனால் உங்களது வியாபாரம் உங்கள் ஊரையும் தாண்டி, வேறு மாநிலம், வெளி நாடுகளுக்கும் செல்லும் வாய்ப்பு இருக்கிறது. இந்த இணையமும் 'கவர்மென்ட் இ-மார்க்கெட் ப்ளேஸ்' போல, ஒரு பெரிய அளவில் வரும் நாள் துாரத்தில் இல்லை.'ஸ்டார்ட் அப்' கம்பெனிதோட்டக்கலைத் துறையில், நுாற்றுக்கணக்கான, 'ஸ்டார்ட் அப் கம்பெனிகள்' வந்துள்ளன.இவற்றில் பதிவு செய்வதால், அவற்றின் வியாபாரம் கூடும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தற்போது, பொருட்களை விற்பனை செய்ய, ஒரு வார காலம் இலவசமாக விளம்பரம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.சந்தேகங்களுக்கு: இ-மெயில்: sethuraman.sathappan@gmail.com, மொபைல் போன்எண்: 98204-51259, இணைய தளம்www.startupandbusinessnews.com - சேதுராமன் சாத்தப்பன் -

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X