ஆனைமலை  புலிகள் காப்பகத்தில் வரையாடு கணக்கெடுப்பு துவக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2021
23:51

வால்பாறை:ஆனைமலை புலிகள் காப்பகத்தில், வரையாடுகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது.தமிழகத்தில் மாநில வனவிலங்கான வரையாடு, மேற்கு மலை தொடர்ச்சியில் மட்டுமே அதிக அளவில் காணப்படுகிறது.மாநிலத்தில், களக்காடுமுண்டம்துறை, ஆனைமலை புலிகள் காப்பகம், நீலகிரி, சிறுவாணி அணைப்பகுதி, கொடைக்கானல் மற்றும் கேரளாவில் சில இடங்களில் வரையாடுகள் காணப்படுகின்றன.மாநில வனவிலங்கான வரையாடுகளை பாதுகாக்கும் வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வனத்துறையினர் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டிற்கான கணக்கெடுப்பு நடத்த, ஆனைமலை, அட்டகட்டி ஆகிய இடங்களில், வனத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.முதல் நாளான நேற்று, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை, ஆனைமலை ஆகிய பகுதிகளில், வனத்துறையினர் கணக்கெடுப்பு நடத்தினர். கால்தடம், எச்சம், நேரடியாக பார்த்து கணக்கெடுக்கும் இத்துறையினர், வரையாடுகள் குறித்த தகவல்களை சேகரித்தனர்.ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் ஆரோக்கியராஜ்சேவியர் தலைமையில் நடந்த கணக்கெடுப்பு பணியில், வனச்சரக அலுவலர்கள், வனவர், வேட்டை தடுப்புக்காவலர்கள், கணக்கெடுப்பாளர்கள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X