ஆயுதப்படை மைதானத்தில் கொரோனா பரிசோதனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2021
00:14

கடலுார் : இரண்டாம் நிலை காவலருக்கான உடல் தகுதி தேர்வில் பங்கேற்க உள்ள இளைஞர்களுக்கு கடலுார் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.



தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில், காவல் துறையில் 2ம் நிலை காவலர், சிறைக்காவலர்கள், தீயணைப்பு வீரர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த டிசம்பர் 13ம் தேதி நடந்தது.இதில், தேர்வு செய்யப்பட்ட 1,975 பேருக்கு உடல் தகுதி தேர்வு, கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் வரும் 21ம் தேதி முதல் துவங்குகிறது. உடல் தகுதி தேர்வில் பங்கேற்கும் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.இதனையடுத்து, உடல் தகுதி தேர்வில் பங்கேற்க உள்ள இளைஞர்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் கடலுார் அரசு மருத்துவமனையில் சமூக இடைவெளியின்றி குவிந்ததால், கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.



இதையடுத்து, எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் உத்தரவின்பேரில், கடலுாரில் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில், உடல் தகுதி தேர்வில் பங்கேற்க உள்ள இளைஞர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.இதனையடுத்து, காலை முதல் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளாதவர்களுக்கு சமூக இடைவெளியுடன் தனிததைனியாக அமர வைக்கப்பட்டு, பாதுகாப்பாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.பாதுகாப்பு கவசம் அணிந்த செவிலியர்கள் உமிழ்நீர் மாதிரியை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பினர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X