பஞ்சு பொம்மை தயாரிப்பு பயிற்சி | தேனி செய்திகள் | Dinamalar
பஞ்சு பொம்மை தயாரிப்பு பயிற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஏப்
2021
00:22

தேனி - தேனி தாலுகா அலுவலகம் எதிரில் கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு பஞ்சு பொம்மை தயாரிப்பதற்கான இலவச பயிற்சி ஏப். 26 முதல் துவங்க உள்ளது. 18 வயது நிரம்பிய வேலை இல்லா கிராமப்புற நபர்கள் விண்ணப்பிக்கலாம். உணவு இலவசம். தினமும் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை 13 நாட்கள் பயிற்சி நடைபெறும். தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ்,தொழில் துவங்க வங்கிக் கடன் பெற ஆலோசனை வழங்கப்படும். விரும்புவோர் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட ஆவணங்களோடு ஏப்.26க்கு முன் நேரில் வந்து முன்பதிவு செய்து பயன் பெறலாம். கூடுதல் விபரங்களுக்கு 81909 22599 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, பயிற்சி நிலைய இயக்குனர் தனசேகரப்பெருமாள் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X