தட்டுப்பாடு? கடலுார் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிக்கு .....இரண்டாம் அலையின் வேகத்தால் அதிகரிக்கும் பாதிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

18 ஏப்
2021
07:08
பதிவு செய்த நாள்
ஏப் 18,2021 00:22

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.



கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த 1ம் தேதி 39ஆக இருந்த கொரோனா தொற்று தற்போது தினசரி பாதிப்பு 200ஐ நெருங்கியுள்ளது.இந்நிலையில், மார்ச் மாதம் முதல் கடலுார் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 71 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 10 அரசு மருத்துவ மனைகள், 7 தனியார் மருத்துவமனைகள் என, 88 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மருத்துவமனைகளில் பணிபுரியும், டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் போலீசார், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.



அடுத்த கட்டமாக 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின், 45 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடலுார் மாவட்டம் முழுதும் நேற்று முன்தினம் வரை ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 732 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இந்நிலையில், தற்போது தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஓரிரு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட ஆர்வமுடன் வந்தவர்கள் நேற்று தடுப்பூசி பற்றாக்குறையால் போடமுடியமால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.



அரசு மருத்துவமனைகளில் கையிருப்பில் உள்ள தடுப்பூசி இன்று வரை மட்டுமே போடமுடியும் என்ற நிலை உள்ளது. இதனால், நாளை 19ம் தேதி முதல் தடுப்பூசிகளுக்கு, தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.இது குறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில், கடலுார் மாவட்டத்தில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் 7 லட்சம் பேர் உள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது கையிருப்பில் உள்ள மருந்து ஓரிரு நாட்கள் வரையே வரும். இதனால், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது' என்றார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஏப்-202107:30:51 IST Report Abuse
ஆப்பு மாண்புமிகு அமைச்சர் விஜயபாஸ்கர் இந்தச் செய்தியை படித்திருக்க வாய்ப்பில்லை. அதான் தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லைன்னு அடிச்சு உடறாரு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X