பற்றாக்குறை! விருதை அரசு மருத்துவமனையில் இடம் ......ஊழியர்கள், நோயாளிகள் கடும் அவதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2021
22:34

விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் இட பற்றாக்குறை காரணமாக, மருத்துவ ஊழியர்கள், நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.



விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் புற நோயாளி களாகவும், 150க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.அதிநவீன சிடி ஸ்கேன், எக்ஸ்ரே, ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கும் மருத்துவ உபகரணங்கள் மூலம் இங்கேயே பரிசோதனை செய்யப்படுகிறது.விருத்தாசலம் மட்டுமல்லாது திட்டக்குடி, வேப்பூர், மங்கலம்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம், மந்தாரக்குப்பம் பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் படையெடுக்கின்றனர்.



சாலை மற்றும் ரயில் விபத்துகளில் காயமடைவோருக்கு இங்கு முதலுதவி அளிக்கப் படுகிறது. இதுபோன்ற நெருக்கடியான நிலையில், போதிய கட்டட வசதியின்றி, அவசர சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதும், 2.5 கோடி ரூபாயில் அவசர சிகிச்சை மற்றும் இருதய சிகிச்சை பிரிவு கட்டடம், 1.5 கோடி ரூபாயில் கண் சிகிச்சை பிரிவு கட்டடமும் கட்டித் தரப்பட்டது.அதுபோல், மகப்பேறு, பொது, முடநீக்கியல் பிரிவுகளில் ஒரே இடத்தில் அறுவை சிகிச்சை செய்வதை தவிர்க்கும் வகையில், கூடுதலாக அறுவை அரங்குகளும், நவீன உபகரணங்களும் பொருத்தப்பட்டன.



நவீன உபகரணங்கள் பயன்பாட்டில் இருந்தாலும், அவற்றை பயன்படுத்த போதிய இடவசதி இல்லை. 108 ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, ஊழியர்களின் வாகனங்கள் நிறுத்த மருத்துவமனை வளாகத்தில் போதிய இடம் இல்லை.இதனை தவிர்க்கும் வகையில், மருத்துவமனையை சுற்றியுள்ள தனியார் நிலங்களை கையகப்படுத்தி, விரிவாக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, மருத்துவமனைக்கு பின்புறம் தனியாருக்கு சொந்தமான நிலமும், வலதுபுறம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தையும் பெற முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, அனைத்து கோப்புகளும் தயாரித்து, அனுப்பியும், அதனை பெற்றுத்தர எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.



மேலும், சிகிச்சைக்கு வருவோர் தங்களது வாகனங்களை மருத்துவமனை முகப்பு வளாகத்தில் நிறுத்துவது வழக்கம். கண் மருத்துவப் பிரிவுக்கு புதிய கட்டடம் கட்டியதால், வாகனங்கள் மருத்துவமனைக்குள் அனுமதிப்பதில்லை. வெளிப்புற சிமென்ட் சாலையில் இருபுறமும் அணிவகுத்து வாகனங்களை நிறுத்துவதால், ஆம்புலன்ஸ் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.



சமீபத்தில், அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி பணியை பார்வையிட்ட மாவட்ட கண்காணிப்பு சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடியிடம், மருத்துவர்கள் இடம் பற்றாக்குறை குறித்து தெரிவித்தனர். அதற்கு, மருத்துவமனைக்கு போதிய இடம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தார்.எனவே, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ ஊழியர்கள், நோயாளிகள் நலன் கருதி, கூடுதலாக இடம் பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X