தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த தாத்தாவை கொலை செய்த பேரன் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2021
22:54

பெண்ணாடம் : விருத்தாசலம் அருகே தாயுடன் கள்ளத் தொடர்பில் இருந்த தாத்தாவை கொலை செய்து நாடகமாடிய பேரன் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.



கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மேலப்பாலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தவலிங்கசெல்வராயர், 71; அதே பகுதியில் உள்ள செல்லியம்மன், மாரியம்மன் கோவில் தர்மகர்த்தாவாக இருந்தார். மனைவி புஷ்பவள்ளி, 3 மகன்கள், மகள் உள்ளனர். கடந்த 8ம் தேதி இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தவர், மறுநாள் காணவில்லை. அதே பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் தலை, முகத்தில் பலத்த காயங்களுடன், இறந்துகிடந்தார்.



கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சந்தேக மரணத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்தனர். கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க உறவினர்கள் மறுத்து வந்தனர். இந்நிலையில், விருத்தாசலம் டி.எஸ்.பி., மோகன், இன்ஸ்பெக்டர் விஜயரங்கன், சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். கொலை தொடர்பாக தவலிங்கசெல்வராயரின் மூத்த மகன் வெங்கேடசனின் மகன் ரஞ்சித்குமார் (எ) கிருஷ்ணா, 26, என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.போலீசார் கூறியதாவது:மருமகள் சுகந்தியுடன் 45, தவலிங்க செல்வராயர் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார்.



இதை அறிந்த ரஞ்சித்குமார், ஆத்திரமடைந்து, நண்பரான, அதே ஊர், பிள்ளையார் கோவில் தெரு, சின்னதுரை மகன் செல்வக்குமார், 35, என்பவருடன் சேர்ந்து தவலிங்க செல்வராயரை கல் மற்றும் கத்தியால் தாக்கி, கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதுகுறித்து, கருவேப்பிலங்குறிச்சி போலீசார், கொலை வழக்காக பதிவு செய்து, ரஞ்சித்குமார், செல்வக்குமாரை கைது செய்தனர். தாத்தாவை கொலை செய்துவிட்டு, ஒன்பது நாட்களாக பேரன் நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X