மாவட்ட அளவிலான கராத்தே போட்டி  | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
மாவட்ட அளவிலான கராத்தே போட்டி 
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஏப்
2021
23:32

கோவை:கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி உடற்கல்வித்துறை மற்றும் மாவட்ட கராத்தே சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான போட்டி நடந்தது. இந்துஸ்தான் கல்விக்குழு நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், போட்டிகளை துவக்கி வைத்தார்.இதில், 5 வயதுக்கு கீழ், 6-7 வயது, 8- 9 வயது, 10-11 வயது, 14-15 வயது, 16-17 வயது, உட்பட வயதுகளின் அடிப்படையில் ஒன்பது பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.பள்ளி, கல்லுாரிகள், தனியார் கிளப்பில் இருந்து , 298 பேர் போட்டிகளில் பங்கேற்றனர். இதில், வெற்றி பெற்ற மாணவர்கள் ஜூன், 16,17 ஆகிய தேதிகளில் திருச்சியில் நடக்கவுள்ள, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.பிரிவு வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு மாலை, கல்லுாரி முதல்வர் பொன்னுசாமி, பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், இந்துஸ்தான் கல்விநிறுவன செயலாளர் பிரியா, மாவட்ட கராத்தே சங்க தலைவர் முத்துராஜூ,உடற்கல்வித்துறை தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X