'ஆப்சென்ட்' மாணவர்களுக்கு சிறப்பு செய்முறை தேர்வு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
'ஆப்சென்ட்' மாணவர்களுக்கு சிறப்பு செய்முறை தேர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஏப்
2021
23:59

கோவை:கொரோனா தொற்று காரணமாக, விடுப்பில் உள்ள மாணவர்களுக்கு, விரைவில் சிறப்பு செய்முறை தேர்வு நடத்த, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், மாநில கல்வித்திட்டம் பின்பற்றும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த 16ம் தேதி முதல், செய்முறை பொதுத்தேர்வு நடக்கிறது. வரும் 23ம் தேதி நிறைவடைகிறது.இருகட்டங்களாக நடக்கும் இத்தேர்வில், கொரோனா தொற்று காரணமாக, விடுப்பு எடுக்கும் மாணவர்களுக்கு, சிறப்பு செய்முறை பொதுத்தேர்வு நடத்த, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூறுகையில், 'உடல் நலக்குறைவு, கொரோனா தொற்று காரணமாக, பங்கேற்க முடியாத மாணவர்களுடன், போனில் தொடர்பு கொண்டு வருகிறோம். இவர்களுக்கு விரைவில், சிறப்பு செய்முறை தேர்வு நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆப்சென்ட் மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து, இதுசார்ந்த அறிவிப்பு வெளியாகும்' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X