விடுதி மாணவர் நிதியில் முறைகேடு? பழங்குடி நல அலுவலர் விசாரணை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2021
01:07

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், 22 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. பள்ளி மூடப்பட்ட காலங்களில் விடுதியில் தங்கி படித்து வந்த பழங்குடியின மாணவர்களின் உணவுக்கான தலா, 6,300 மற்றும் உதவித் தொகை, 1,000 ரூபாய் என, மொத்தம் 7,300 ரூபாய் வழங்க நிதி ஒதுக்கப்பட்டது.அந்த பணத்தை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஒவ்வொரு பழங்குடியின மாணவர்களின் பெயர்; அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் வங்கி கணக்கில் செலுத்தி, சம்பந்தப்பட்ட மாணவர்கள் அல்லது பெற்றோரின் கையெழுத்து பெற்று அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.சில பள்ளிகளில், மாணவர்களுக்கு வந்த பணத்தை இங்கு பணியாற்றும் சமையலர் உட்பட சிலரின் பேரில் உள்ள வங்கி கணக்கில் வரவு வைத்து, தலைமை ஆசிரியர்கள் எடுத்து கொண்டதாக, பழங்குடியினர் அலுவலகத்துக்கு புகார் சென்றுள்ளது.மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் சுகந்தி பரிமளம் கூறுகையில்,''பழங்குடியின மாணவர்களின் உணவுக்காக வழங்கப்பட்ட நிதியில் மோசடி நடந்துள்ளதாக, சில பள்ளிகள் குறித்து புகார் வந்துள்ளது. இதுகுறித்து மாவட்டத்தில் உள்ள, 22 பள்ளிகளிலும் நேரடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முழு விசாரணைக்கு பின், முழு விபரம் தெரிவிக்கப்படும்,'' என்றார்.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில்,''இது குறித்து எழுத்து பூர்வமான புகார் வந்தால், குறிப்பிட்ட நபர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X