கவர்னர் கார் முற்றுகை: புதுச்சேரியில் பரபரப்பு | செய்திகள் | Dinamalar
கவர்னர் கார் முற்றுகை: புதுச்சேரியில் பரபரப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஏப்
2021
01:19

புதுச்சேரி:புதுச்சேரி காந்தி வீதியில், ஞாயிற்றுக் கிழமைகளில் கடைகளை மூடும்படி கூறிய நகராட்சியை கண்டித்து, கவர்னர் காரை, வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள, 350க்கும் மேற்பட்ட நிரந்தர கடைகளை, ஞாயிற்றுக் கிழமைகளில் மூட வேண்டும் என, நகராட்சி வருவாய் துறை ஊழியர்கள் நேற்று எச்சரித்தனர். இதை கண்டித்து, நேரு வீதி - காந்தி வீதி சந்திப்பில், வியாபாரிகள் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.அப்போது, மார்க்கெட்டில் கூட்ட நெரிசலை ஆய்வு செய்ய, கவர்னர் தமிழிசை காரில் வந்ததால், மறியலில் ஈடுபட்டவர்களை, பெரியகடை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். கவர்னரின் காரை, வியாபாரிகள் சூழ்ந்து முற்றுகையிட்டனர்.காரிலிருந்து இறங்கிய கவர்னர், வியாபாரிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அருகிலிருந்த கலெக்டர் பூர்வா கார்க்கிடம், கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதா என கேட்டார். ஏதும் இல்லை என கலெக்டர் கூறினார்.'உத்தரவு இல்லாத போது, கடைகளை மூடச் சொல்ல கூடாது' என, நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 'கடைகளை திறக்கலாம்' என, வியாபாரிகளிடம் கவர்னர் கூறினார். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X