வெள்ளிக்கவசம் திருட்டு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
வெள்ளிக்கவசம் திருட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஏப்
2021
01:32

கருமத்தம்பட்டி அடுத்த சின்ன மோப்பிரிபாளையத்தில் ஆதி விநாயகர் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவு, பூஜையை முடித்த பூஜாரி, கோவிலை பூட்டி சென்றார்.காலையில் கோவிலைத் திறக்க வந்த போது, கதவு உடைக்கப்பட்டிருந்தது. கோவில் நிர்வாகிகள் உள்ளே சென்று பார்த்தபோது, விநாயகருக்கு சாத்தப்பட்டிருந்த, 3 கிலோ எடையுள்ள வெள்ளி கவசங்கள் திருடப்பட்டிருந்தன. வழக்குப் பதிவு செய்த போலீசார், கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரிக்கின்றனர்.நகை திருட்டுகாரமடை அடுத்த தேரம்பாளையத்தை சேர்ந்தவர் தாமோதரன், 29; பெங்களூரில் பணிபுரிகிறார். விடுமுறையில் தேரம்பாளையம் வந்த தாமோதரன், தனது அம்மா, தம்பி ஆகியோருடன் உறவினர் வீட்டிற்கு சென்றார். இரவு, 7:30 மணிக்கு வீடு திரும்பியபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த இரண்டு பவுன் நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.காரமடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.கஞ்சா: நால்வர் கைதுசூலுார் இன்ஸ்பெக்டர் முருகேசன் உத்தரவின்பேரில், ரங்கநாதபுரம் பகுதியில் எஸ்.ஐ., சுல்தான் இப்ராஹிமும், பாரதிபுரத்தில் எஸ்.ஐ., ராதாகிருஷ்ணனும் சோதனை நடத்தினர்.ரங்கநாதபுரத்தில் ஒரு வீட்டில் நடத்திய சோதனையில், அங்கு பதுக்கப்பட்ட 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். வீட்டில் இருந்த ஒடிசாவைச் சேர்ந்த, சுமந்தா பிஸ்வால், 31, துஸ்மந்த் பிஸ்வால்,31 ஆகிய இருவரையும் கைது செய்தனர். இரு பைக்குகள், பொட்டலம் போட பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பாப்பம்பட்டி பிரிவு அருகே நடந்த வாகன சோதனையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரபாஸ்குமாரோ, 27, மதுரை, கோரிப்பாளையத்தை சேர்ந்த கிருபாகரன், 19 ஆகியோரிடம் இருந்து, 1.100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார், இரு பைக்குகள், எடை இயந்திரம், மொபைல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.இவர்களுடன் தொடர்புடைய நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.மொபைல்போன் பறிப்புநரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்த மணிகாரம்பாளையம், கலைஞர் நகரை சேர்ந்தவர் கண்மணி, 26; ஐ.டி., நிறுவன ஊழியர். இவர், இடிகரை அரசு பள்ளி அருகே மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், விலாசம் கேட்பது போல பாசாங்கு செய்து, கண்மணியின் கையில் இருந்த மொபைல் போனை பறித்து, தப்பிச் சென்றனர். இதுகுறித்து, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X