இது உங்கள் இடம்: கூட்டணி தயவில் தி.மு.க.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

19 ஏப்
2021
02:00
பதிவு செய்த நாள்
ஏப் 19,2021 01:58

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :

மல்லிகா அன்பழகன், சென்னையிலிருந்து எழுதுகிறார்:நடந்தது சட்டசபை தேர்தல் என்பதை மறந்து, தி.மு.க., கூட்டணி கட்சிகள், பிரதமர் மோடியை விமர்சித்தே அதிகம் பிரசாரம் செய்தன. 'மதவாத, பா.ஜ.,வை தலை துாக்க விட மாட்டோம்' என, அக்கட்சிகள் கொக்கரித்தன. அதெல்லாம் சரிங்க... 2021ல், தமிழகத்தில் ஓரளவிற்கு வளர்ந்திருக்கும் பா.ஜ.,வுக்கு, கூட்டணியில், அ.தி.மு.க., கொடுத்தது, 20 சீட்டுகள் தான். ஆனால், 2001ல், வளரவே இல்லாத பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்து, தி.மு.க., ஒதுக்கியது, 21 சீட்டுகள்!இதில், 'ஹைலைட்' என்ன தெரியுமா...தேர்தல் வெற்றிக்குப் பின், முதன் முதலாக, தமிழக சட்டசபைக்குள், நான்கு உறுப்பினர்களுடன், பா.ஜ., நுழைந்தது. அந்த வரலாறு எல்லாம் மறந்து விட்டதா, தி.மு.க.,வினரே?கருணாநிதிக்கும், எம்.ஜி.ஆருக்கும் நடந்த, 'ஈகோ' மோதலில் தான், அ.தி.மு.க., தோன்றியது. எம்.ஜி.ஆர்., இருக்கும் வரை, தி.மு.க., ஜெயிக்கவே முடியாது என்ற உண்மையை, கருணாநிதிக்கு காலம் உணர்த்தியது.அது மட்டுமா... 1977 தேர்தலில், 48 இடங்கள்; 1980ல், 37; 1984ல், 24 இடங்கள் என, தி.மு.க., தேய்ந்த கதையையும் மறந்து விடக்கூடாது.எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், அ.தி.மு.க., உடைந்ததால் தான், தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததே தவிர, தி.மு.க.,வின் செல்வாக்கு ஒன்றும் உயரவில்லை.ஜெயலலிதா தலைமையில், அ.தி.மு.க., பீனிக்ஸ் பறவையாக உயிர்த்தெழுந்து, 1991ல் ஆட்சி அமைத்த போது, தி.மு.க., வெற்றி பெற்ற இடங்கள், இரண்டே இரண்டு தான்.இன்னொன்று சொல்லவா... 2006ல் வெறும், 96 இடங்கள் ஜெயித்து, தமிழகத்தில், 'மைனாரிட்டி' ஆட்சி நடத்திய ஒரே கட்சியும், தி.மு.க., தான்.தி.மு.க., தனித்து நின்று, 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது. அ.தி.மு.க.,விற்கு இருந்த செல்வாக்கு, தைரியம் எதுவும், தி.மு.க.,விற்கு கிடையாது.இந்த லட்சணத்தில், 2021 தேர்தலில், 234 தொகுதிகளிலும், தி.மு.க., ஜெயிக்கும் என, ஸ்டாலின் பிரசாரத்தில் முழங்கினார்.


அவரது மகன் உதயநிதியோ கொஞ்சம் பெருந்தன்மையாக, 200 தொகுதிகளை தாண்ட வேண்டும் என, ஆசைப்பட்டார். தி.மு.க.,வின் வெற்றி என்பது, கூட்டணி கட்சிகளின் தயவால் கிடைப்பது என்பதை, அக்கட்சியினர் நினைவில் கொள்ள வேண்டும்.இதில் வேடிக்கை என்ன வென்றால், முதல்வர் வேட்பாளர் களத்தில் நிற்கும், இ.பி.எஸ்., போட்டியிட்ட தொகுதி, 85.60 சதவீத ஓட்டுப் பதிவுடன், முன்னிலை வகிக்கிறது.ஆனால், ஸ்டாலின் தொகுதியிலோ, 60.52 சதவீதம் தான். உதயநிதி தொகுதியிலோ, வெறும், 58.41 சதவீதம் தான். இவர்களை விட, தினகரன், கமல் உள்ளிட்டோர் போட்டி இட்ட தொகுதிகளில், ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகம்.மே 2ல், எல்லாம் வெளிச்சமாயிடும். பார்க்கத் தானே போறோம், தமிழக மக்களோட ஆட்டத்தை!

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (135)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthikeyan K Y - Chennai,இந்தியா
25-ஏப்-202108:33:06 IST Report Abuse
Karthikeyan K Y தமிழகத்தில் ஒரு தலைவரே இன்று இல்லை, சிறந்த தலைவர் என்பது அடுத்தது , திமுகவிற்கு கிடைக்கும் வோட்டு அதிமுக எதிர் வோட்டுக்களும், பி ஜே பி எதிர் மறை பேச்சுக்கலாலும் ஹிந்துக்கல்லுக்கும் எதிரான பேச்சுக்களும்தான் . இந்த தேர்தலில் திமுக ஜெயித்தால் திமுக, விடுதலை சிறுத்தைகளுக்கு தமிழகம் அவரருடைய சொத்துக்களையும் கொடுத்து விட்டு அவரவர் வீடு பெண்களை பாதுகாப்பாக இருக்க வேண்டும். தமிழகத்தை விட்டு செல்ல வேண்டிய அவதி நிலை கூட வரலாம். விடுதலை சிறுத்தைகளின் அராஜகத்தையும் அட்டகாசத்தையும் தாம்பரம் தாண்டி மரக்காணம் வரையிலும், விழுப்புரம் வரையிலும் யாரும் சொத்து வாங்க முடியாது . திமுகவும் விடுதலை சிறுத்தைகளும் தமிழகத்தை சீரழிக்க போகிறார்கள்
Rate this:
Cancel
ரகு -  ( Posted via: Dinamalar Android App )
20-ஏப்-202107:34:22 IST Report Abuse
ரகு ஓட்டுபதிவு சதவிகிதம் வேட்பாளரை பொறுத்து மாறாது. தாங்கள் வசிக்கும் சென்னை முழுவதும் இதே நிலைதான் என்பதை நினைவில் கொள்ளவும்.
Rate this:
Cancel
ரகு -  ( Posted via: Dinamalar Android App )
20-ஏப்-202107:34:12 IST Report Abuse
ரகு நல்ல வேடிக்கையாக உள்ளது. ஓட்டுபதிவு சதவிகிதம் வேட்பாளரை பொறுத்து மாறாது. தாங்கள் வசிக்கும் சென்னை முழுவதும் இதே நிலைதான் என்பதை நினைவில் கொள்ளவும். பயம் தங்கள் எழுத்துக்களில் நன்றாக தெரிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X