ஓ.எம்.ஆரில் உலக தரத்தில் கட்டமைப்பு வசதிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2021
05:28

அடையாறு : ஓ.எம்.ஆர்.,ரில் உள்ள, மூன்று மேம்பால ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 2 கி.மீ., நீளத்தில், 20 கோடி ரூபாயில், நடைபாதை, சைக்கிள் பாதை மற்றும் அடர்வனம் அமைக்கும் பணி, வேகமாக நடைபெறுகிறது.



ஓ.எம்.ஆரில், கஸ்துாரிபாய் நகர், இந்திரா நகர், திருவான்மியூர் ஆகிய, மூன்று மேம்பால ரயில் நிலையங்களின் துாண்கள், பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டி உள்ளது.இந்த, மூன்று ரயில் நிலையங்களின் துாரம், 2 கி.மீ., ஆகும். கால்வாயின், கிழக்கு திசையில், 30 முதல். 50 அடி அகலம் வரை, காலி இடம் உள்ளது.கால்வாயின், மேற்கு திசையில், ரயில் தண்டவாள துாண்கள் கீழ் பகுதியில், 30 அடி அகல காலி இடம் உள்ளது. இந்த இடங்கள், ஆக்கிரமிப்பு களாலும், புதர்மண்டியும் காணப்பட்டன.இந்த இடத்தை பயனுள்ளதாக மாற்ற, மாநகராட்சி முடிவு செய்தது. இதையடுத்து, கஸ்துாரி பாய் நகர் முதல், திருவான்மியூர் ரயில் நிலையம் வரை, 2 கி.மீ., துாரத்தை மேம்படுத்த, 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.இதில், நடைபாதை, சைக்கிள் பாதை, 'மியாவாக்கி' என்ற அடர்வனம், சிறுவர் பூங்கா, இருக்கை, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படுகின்றன. தற்போது, பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.இந்தாண்டு இறுதிக்குள், அனைத்து பணிகளையும் முடிக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டிய, 2 கி.மீ., நீளத்தில், உலக தரத்தில், நடைபாதை, சைக்கிள் பாதை, பூங்கா அமைக்கப்படுகிறது. மூன்று ரயில் நிலையங்களை ஒருங்கிணைத்து பணி நடப்பதால், இந்த ரயில் நிலையங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அடர்வனத்தால், இந்த பகுதியில் பசுமை அதிகரிக்கும்.மாநகராட்சி அதிகாரிகள்வசதிகள் என்ன?பக்கிங்ஹாம் கால்வாயின், கிழக்கு திசையில், 12 அடி அகல நடைபாதை, 12 அடி அகல சைக்கிள் பாதை மற்றும் மீதமுள்ள இடத்தில், 'மியாவாக்கி' என்ற அடர்வனம்கால்வாயின், மேற்கு திசையில், தண்டவாள துாண்கள் கீழ் பகுதியில், நடைபாதை, சிறுவர் பூங்கா, செயற்கை நீரூற்று, வர்ண விளக்குகள், ஓவியங்கள், சிமென்ட் இருக்கை, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு உபகரணங்கள்அடர்வனம், 2 கி.மீ., நீளம், 25 முதல், 35 அடி அகலம் வரை அமைக்கப்படுகிறது. 3 அடி சதுர பரப்பரளவில், மூன்று வகையான மரக்கன்றுகள் நடப்படும். ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடுவதால், ஓரிரு ஆண்டில் வளர்ந்து, பசுமை நிறைந்த பகுதியாக காட்சியளிக்கும்திருவான்மியூர், அடையாறு, கோட்டூர்புரம் சுற்றுவட்டார பகுதிமக்கள் சாலையை தவிர்த்து, நெரிசல் இல்லாமல் சைக்கிள் பாதையில் பயணிக்க முடியும்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X