தெரு பெயர் பலகைகளில் 'போஸ்டர்' ஒட்டுவோர் மீது நடவடிக்கை பாயுமா? | சென்னை செய்திகள் | Dinamalar
தெரு பெயர் பலகைகளில் 'போஸ்டர்' ஒட்டுவோர் மீது நடவடிக்கை பாயுமா?
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஏப்
2021
05:36

வடபழநி : தெரு பெயர் பலகைகளில் அத்துமீறி, 'போஸ்டர்' ஒட்டுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தெருக்களின் பெயர், முகவரி, வார்டு எண், மண்டலம் உள்ளிட்ட விபரங்களை, பொதுமக்கள் அறிவதற்கு வசதியாக, பெயர் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. முகவரி தேடுவோருக்கு, இந்த தெரு பலகைகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. குறிப்பாக, கோடம்பாக்கம் மண்டலத்தில், 16 வார்டுகள் உள்ளன.



இங்கு, வடபழநி, சாலிகிராமம், விருகம்பாக்கம், அசோக் நகர், கே.கே.நகர், கோடம்பாக்கம், கோயம்பேடு போன்ற பகுதிகளில் உள்ள வார்டுகளில், 2,000க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.ஒவ்வொரு தெருக்களிலும், பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளன. இதில், 100க்கும் மேற்பட்ட தெரு பெயர் பலகைகளில், அரசியல் கட்சி, திருமணம், இறுதிச் சடங்கு போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.இதனால், எந்த நோக்கத்திற்காக பெயர் பலகைகள் வைக்கப்பட்டனவோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் போயுள்ளது. பல இடங்களில், பெயர் பலகைகள் முழுமையாக சேதமடைந்து உள்ளன.எனவே, பெயர் பலகைகளில் போஸ்டர் ஒட்டுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X