ரூ.4.90 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை | ஈரோடு செய்திகள் | Dinamalar
ரூ.4.90 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஏப்
2021
08:48

மொடக்குறிச்சி: ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 39 ஆயிரத்து, 980 தேங்காய்கள் வரத்தாகின. ஒரு டன், 26 ஆயிரத்து, 650 ரூபாய் முதல், 38 ஆயிரத்து, 390 ரூபாய் வரை விலை போனது. மொத்தம், நான்கு லட்சத்து, 90 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.


ரூ.42 லட்சத்துக்கு எள் ஏலம்: பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், எள் ஏலம் நடந்தது. இதில் வெள்ளை எள் கிலோ, 97.18-110.49 ரூபாய் வரை, கறுப்பு எள், 97.80-115.60 ரூபாய் வரை, 42.33 லட்சம் ரூபாய்க்கு விற்றது.


காளை மாடு ஜோடி ரூ.95 ஆயிரம்: அந்தியூரில் கால்நடை சந்தை நேற்று நடந்தது. நாட்டுகாளை மாடு ஜோடி, 80-95 ஆயிரம் ரூபாய், நாட்டு பசு மாடு, 25-45 ஆயிரம் ரூபாய், பர்கூர் பசு, 15-22 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது. இதேபோல், பர்கூர் காளை, 16-30 ஆயிரம் ரூபாய், எருமை, 11-19 ஆயிரம் ரூபாய், நாட்டு கன்று குட்டி, 7,000 ரூபாய் முதல், 14 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது. ஜெர்சி பசு, 20-30 ஆயிரம் ரூபாய், சிந்து மாடு, 24-42 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.


மல்லிகை விலை வீழ்ச்சி: புன்செய்புளியம்பட்டி மற்றும் பவானிசாகர் சுற்றுவட்டாரத்தில், கடந்த ஜனவரி மாதத்தில், ஒரு கிலோ மல்லிகை, 2,000 ரூபாய் வரை விற்றது. தற்போது விளைச்சல் அதிகரிப்பால், கிலோ, 220 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


கதளி கிலோ ரூ.18: கோபி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. கதளி ஒரு கிலோ, 18 ரூபாய், நேந்திரம், 28 ரூபாய்க்கு விற்றது. பூவன் தார், 510, தேன்வாழை, 500, செவ்வாழை, 530, பச்சைநாடான், 310, ரஸ்த்தாளி, 390, ரொபஸ்டா, 320, மொந்தன், 300 ரூபாய்க்கும் விலைபோனது. இதேபோல் தேங்காய் ஏலம் நடந்தது. இதில் ஒரு காய், ஒன்பது ரூபாய் முதல், 16.10 ரூபாய் வரை விலை போனது.


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X