பிரதான சாலையில் மண் சரிவு; சரிசெய்ய வலியுறுத்தல் | நாமக்கல் செய்திகள் | Dinamalar
பிரதான சாலையில் மண் சரிவு; சரிசெய்ய வலியுறுத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஏப்
2021
14:05

மல்லசமுத்திரம்: பருத்திபள்ளி- மாரம்பாளையம் சாலையில் ஏற்பட்டுள்ள மண்சரிவை சரிசெய்ய, கோரிக்கை எழுந்துள்ளது. மல்லசமுத்திரம் ஒன்றியம், பருத்திபள்ளியில் இருந்து மாரம்பாளையம் வரை, அதிக எண்ணிக்கையில் இருசக்கர, கனரக, இலகுரக வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில், இரண்டு கி.மீ., தொலைவிற்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், வாகனஓட்டிகள் சாலையை விட்டு சற்று தள்ளி சென்றால், மண்சரிவில் சிக்கி விபத்து ஏற்படுகிறது. எனவே, மண்சரிவை சரிசெய்ய, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X