போலீஸ் டைரி: போலீசுக்கு மிரட்டல் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
போலீஸ் டைரி: போலீசுக்கு மிரட்டல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
00:40

அன்னுார் அடுத்த கஞ்சப்பள்ளி பிரிவில், நேற்று முன்தினம் மாலையில், இருவர் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டும், அடித்துக் கொண்டும், இருந்தனர். இதைப்பார்த்த, போலீஸ்காரர் சுரேஷ்குமார் இருவரையும் விலக்கி விட்டார். அப்போது, அவர்கள் இருவரும், போலீஸ்காரர் சுரேஷ்குமாரை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இதையடுத்து, ஒரிசாவை சேர்ந்த சுனில்குமார் சாகு, 27; கஞ்சப்பள்ளியைச் சேர்ந்த சுரேஷ் குமார், 41, ஆகிய இருவர் மீதும், அன்னுார் போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோபி சிறையில் அடைத்தனர்.போலீசார் திணறல்துடியலுார் அருகே, பன்னிமடையில் தனியாக வசித்து வந்தவர் முத்துலட்சுமி, 72. கடந்த, 18ம் தேதி காலை, கொலைசெய்யப்பட்டார். நகைகள் திருடுபோயிருந்தன. தடாகம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.கொலை தொடர்பாக அறையில் இருந்த கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர். 'சிசிடிவி' கேமரா பதிவுகள், அப்பகுதியில் மொபைல்போன்களின் இயக்கம் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். குற்றவாளிகள் குறித்த துப்பு துலங்காமல், போலீசார் திணறி வருகின்றனர். 'விரைவில் குற்றவாளிகளைப் பிடிப்போம்' என, போலீசார் தெரிவித்துள்ளனர்.போலீசிடம் தகராறுசிறுமுகை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முனுசாமி. இவர் நீலிபாளையம் சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, 2 மோட்டார் சைக்கிள்களில், 4 பேர் வந்தனர். அவர்கள் குடிபோதையில் உள்ளனரா என, சோதனை செய்தார். அப்போது, மூன்று பேர் குடி போதையிலும், ஒருவர் மது குடிக்கவில்லை எனவும், தெரியவந்தது.குடித்திருந்த மூவரும், சப்- இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து, காரமடை வடவள்ளி முகாசி செம்பட்டியை சேர்ந்த சந்தோஷ், 26, நந்தகுமார், 30, ரங்கசாமி, 30 ஆகிய மூவர் மீதும், வழக்குப் பதிந்து கைது செய்தனர்.விபத்துகளில் இருவர் பலி*சுல்தான்பேட்டை அடுத்த செஞ்சேரிப்புத்துாரை சேர்ந்தவர் சம்பத்குமார், 19; கூலித் தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜுடன், பைக்கில் சென்றனர். சம்பத்குமார் பைக்கை ஓட்டினார்.அங்குள்ள கூட்டுறவு சங்கம் அருகில் சென்றபோது, அவ்வழியே வந்த கார், பைக் மீது மோதியது. இதில், சம்பத்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். மோகன்ராஜ் பல்லடம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.* காரமடை அடுத்த பெரியபுதுாரை சேர்ந்தவர், பாலமுருகன், 38; கோவையில்தனியார் எலக்ட்ரானிக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் வேலை முடிந்து, இரவில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். சின்னபுத்துார் ஏ.டி., காலனி அருகே வரும் போது, எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அன்னுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாலமுருகன், சிகிச்சை பலனின்றி இறந்தார். காரமடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.வாலிபருக்கு தர்ம அடிசுல்தான்பேட்டை அடுத்த சின்ன வதம்பச்சேரியை சேர்ந்தவர் லோகநாயகி, 30. நேற்று முன்தினம் வடுகபாளையம் ரோடு, அம்மன் நகர் அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் பைக்கில் வந்த நபர், லோகநாயகி அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றார். அதிர்ச்சியில் அவர் கூச்சலிட, அப்பகுதியில் இருந்தவர்கள், அந்நபரை சுற்றி வளைத்துப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின் சுல்தான்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த பூவலூரைச் சேர்ந்த தங்கராஜ் மகன் ராஜேந்திரன், 32, என்பது தெரிந்தது. அவனை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.போதையில் விழுந்தவர் பலிசென்னையைச் சேர்ந்தவர் முகமது, 61. வேலை தேடி, கோவை வந்துள்ளார். சுல்தான்பேட்டை அடுத்த செலக்கரச்சல் பகுதியில் வேலை தேடியவர், அங்கு மது குடித்துவிட்டு, அங்குள்ள குட்டையின் தடுப்பு சுவர் மீது படுத்து துாங்கியுள்ளார். போதையில் கீழே விழுந்ததில், முகம் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் அவர் இறந்தார். சுல்தான்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X