விறுவிறுப்பு! மேம்பாலம் கட்டுமானப் பணி:ஓராண்டுக்குள் முடிக்க திட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

20 ஏப்
2021
02:02
பதிவு செய்த நாள்
ஏப் 20,2021 00:43

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் ரோட்டில், 1.4 கி.மீ., நீளத்துக்கு நான்குவழிச்சாலையாக மேம்பாலம் கட்டுமானப் பணி நடக்கிறது. ஓராண்டுக்குள் முடிக்கத் திட்டமிட்டு, பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.கோவை - மேட்டுப்பாளையம் ரோடு அகலப்படுத்தும் பணி கடந்த, 2010ம் ஆண்டு நடந்தது. கோவையிலிருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் வரை, 49 கோடியே, 65 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


இதற்கு பின் மேட்டுப்பாளையம் கோவை சாலையில், நரசிம்மநாயக்கன்பாளையம் வரை இருந்த போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு ஓரளவு தீர்வு ஏற்பட்டது. இதைதொடர்ந்து, கவுண்டம்பாளையம் மற்றும் சுப்பிரமணியம்பாளையம் பிரிவு ஆகிய இடங்களில் மேம்பாலம் கட்டும் பணி துவங்கி, நடந்து வருகிறது.



இந்நிலையில் மேட்டுப்பாளையம் ரோடு, பெரியநாயக்கன்பாளையத்தில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா முதல் சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை, 1.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு, மேம்பாலம் கட்டுமான பணி கடந்த, 6 மாதம் முன்பு தொடங்கியது.இதற்காக பெரியநாயக்கன்பாளையத்தில் எல்.எம்.டபிள்யூ., பிரிவிலிருந்து, சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை சாலையோரம் இருந்த புளிய மரங்கள் அகற்றப்பட்டன.


தற்போது, மேம்பாலம் கட்டுமான பணி வேகமாக நடந்து வருகிறது.எல்.எம்.டபிள்யூ., பிரிவு பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட், சாமிசெட்டிபாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் தூண்கள் அமைக்க, பிரம்மாண்டமான குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. இதில், எல். எம். டபிள்யூ., பிரிவு பகுதியில் தூண்கள் அமைக்கும் பணி, வேகமாக நடந்து வருகிறது.மேம்பாலம் நான்கு வழிச்சாலையாக, 17.5 மீட்டர் அகலத்துடன் அமைக்கப்படுகிறது. இன்னும் ஓராண்டுக்குள் பாலம் கட்டுமான பணியை, முழுவதுமாக கட்டி, முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் பாலம் கட்டுமான பணி நிறைவு பெற்று விட்டால்.எல்.எம்.டபிள்யூ., பிரிவு, பெரிய நாயக்கன்பாளையம், சாமிசெட்டிபாளையம் பிரிவு ஆகிய இடங்களில் இருந்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும்.


அதோடு கோவையிலிருந்து பெரியநாயக்கன்பாளையம் வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் நபர்கள், பாலத்தின் மீது செல்வதால், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை ஒரு சில நிமிடங்களில் கடந்துவிடலாம்.கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில், கவுண்டம்பாளையம், சுப்பிரமணியம்பாளையம் பிரிவு, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களை தவிர, துடியலுார் சாய்பாபா காலனி, காளப்பட்டி ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் கட்ட நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன், நடப்பாண்டில் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
20-ஏப்-202107:38:32 IST Report Abuse
தல புராணம் முழு பணத்தையும் சாங்ஷன் பண்ணி கமிஷனை ஏற்கனவே ஆட்டையைப் போட்டிருப்பானுங்க கோவை சி. எம் ஊழல் கோஷ்டி. காத்திலே கீழ வுழுந்திடிச்சிங்கோன்னு கதையை முடிச்சிடுவாங்க. பயங்கர மழையில் சுவர் கரைஞ்சா மாரீ இதுவும் போச்சின்னுடுவாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X