சிறுத்தைக்கு மேலும் ஒரு கூண்டு: போக்கு காட்டுவதால் மக்கள் பீதி | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
சிறுத்தைக்கு மேலும் ஒரு கூண்டு: போக்கு காட்டுவதால் மக்கள் பீதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
00:54

வால்பாறை:வால்பாறை நகரில் கூண்டில் சிக்காத சிறுத்தையை பிடிக்க, மேலும் ஒரு கூண்டு வைக்கப்பட்டுள்ளது.வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில், கடந்த, 7ம் தேதி நள்ளிரவு, ஐ.பி.ஏ., சர்ச் வழியாக சென்ற சிறுத்தையை, சிலர் வீடியோ எடுத்து, சமூகவலைதளத்தில் வெளியிட்டனர்.இதையடுத்து, நகரில் நடமாடும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.வால்பாறை வனச்சரக அலுவலர் ஜெயசந்திரன் தலைமையில், வனவர் முனியாண்டி மற்றும் வனவிலங்கு - மனித மோதல் தடுப்புக்குழுவினர், சிறுத்தை நடந்து சென்ற பாதையில், கண்காணிப்பு கேமராவும், கூண்டும் அமைத்தனர்.ஆனால், ஒரு வாரத்திற்கு மேலாகியும் சிறுத்தை கூண்டில் சிக்கவில்லை. இதனையடுத்து வனத்துறையினர், அதே பகுதில் மேலும் ஒரு கூண்டு வைத்து தொடர்ந்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.வனத்துறையினர் கூறியதாவது:வால்பாறை நகரில், கேமராவில் பதிவான சிறுத்தை சென்ற பகுதிகளை ஆய்வு செய்து, இரண்டு இடங்களில் கூண்டு வைத்துள்ளோம். நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00மணிக்கு கூண்டு அருகே வந்த சிறுத்தை, கூண்டிற்குள் செல்லாமல் 'எஸ்கேப்' ஆனது.கடந்த ஒரு வாரமாக, கூண்டில் சிக்காமல் போக்குக்காட்டி வருகிறது. விரைவில் சிறுத்தை கூண்டில் சிக்கும். இரவு நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X