ரயில் முன் பாய்ந்து காதலர்கள் தற்கொலை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
ரயில் முன் பாய்ந்து காதலர்கள் தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
01:28

கோவை:தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், கோவையில் காதலர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தனர்.கோவை இருகூர் அருகே, நேற்று காலையில் ரயில் பாதையில் ஆண், பெண் சடலங்கள் கிடப்பதாக, போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அங்கு சென்ற போலீசார் சடலங்களை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், இறந்தவர்கள் ஒண்டிப்புதுார் ஒட்டர்பாளையம், காந்திநகரை சேர்ந்த குணசேகரன் மகன் பிரவீன் குமார், 31; மருதமலையை சேர்ந்த செல்வராஜ் மகள் ஸ்ரீவித்யா, 31 என தெரியவந்தது.இருவரும் கல்லுாரியில் ஒன்றாக படித்துள்ளனர். தொடர்ந்து, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளனர்.


கடந்தாண்டு இருவரும் சேர்ந்து, 'டிரேடிங்' தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இருவருக்கும் திருமணம் செய்துவைக்க, பெற்றோர் முடிவு செய்தனர்.இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், இருவரும் மனமுடைந்தனர். கடந்த, 15ம் தேதி வீட்டிலிருந்த சென்ற ஸ்ரீவித்யா திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், 17ம் தேதி வடவள்ளி போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். அதுபோலவே, பிரவீன் குமாரையும் காணவில்லை.இருவரையும் போலீசார் தேடி வந்த நிலையில்தான், நேற்று அதிகாலை, 3:45 மணியளவில் கேரளா நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து, இருவரும் தற்கொலை செய்தது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X