'இரண்டு தடுப்பூசியும் கடவுள் கொடுத்த வரம்!' கொரோனா பயமின்றி நம்பிக்கையுடன் வாழலாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
01:34

கோவை;'கொரோனா இரண்டாவது பரவல் அதிகரித்து வரும் நிலையில், கடவுள் கொடுத்த வரம் போல், இரண்டு தடுப்பூசிகள் நமக்கு கிடைத்துள்ளன. இதை போட்டு கொண்டால் கொரோனா தொற்று பயம் இல்லாமல், நம்பிக்கையுடன் வாழலாம்' என, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


கோவையில், கொரோனா தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தடுப்பூசி செலுத்திய சிலர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.மணியன், 'சிறுதுளி' உயர்மட்ட குழு உறுப்பினர், கோவை: நான் முதல் டோஸ் போட்டு இருக்கிறேன். ஒரு நாள் கைவலியும், லேசான காய்ச்சலும் இருந்தது. உடல்வலி, காய்ச்சல் இருந்தால் போட்டுக்கொள்ள மாத்திரை கொடுத்தனர். நான் மாத்திரைகளை சாப்பிடவில்லை. மறுநாள் அதுவே சரியாகி விட்டது. என் அம்மா முதியவர். அவரும் தடுப்பூசி போட்டுள்ளார். அவருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. யாரும் பயப்பட வேண்டாம். எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.சுப்ரமணியன், தொழில் முனைவோர், கோவை: நான் கோவிஷீல்டு இரண்டு 'டோஸ்' போட்டு இருக்கிறேன். முதல் முறை போடும்போது உடல் சேர்வு இருந்தது. இரண்டு நாளில் அது சரியாகி விட்டது. இரண்டாவது டோஸ் போடும்போது, அப்படி எதுவும் இல்லை. இப்போது நார்மலாக இருக்கிறேன். தடுப்பூசி போடும் முன், எனக்கு அடிக்கடி தலைவலி இருந்தது. ஊசி போட்ட பிறகு தலைவலி இல்லை.


குறிப்பாக, கொரோனா பயம் போய் விட்டது. தைரியமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.நடராஜன், செயலாளர், கோவை சேம்பர்: எங்கள் குடும்பத்தில் நான், என் மனைவி, அம்மா மூன்று பேரும் தடுப்பூசி போட்டு இருக்கிறோம். எனக்கு ஒருநாள் காய்ச்சல் இருந்தது. அம்மாவுக்கு, 80 வயது ஆகிறது. அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை. அம்மாவுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்த பிரச்னை உண்டு. ஆனால், தடுப்பூசியால் எந்த பிரச்னையும் இல்லை. நடிகர் விவேக் மரணத்துக்கும், தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வீண் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். கொரோனாவுக்கு தடுப்பூசி தான் பாதுகாப்பு.


கேசவன், மென்பொருள் ஆலோசகர், கோவை: ஆரம்பத்தில் கொரோனா பரவியபோது, தொற்று ஏற்பட்டு, சிகிச்சைக்கு பிறகு குணமானேன். இருதய அறுவை சிகிச்சை செய்து இருக்கிறேன். தடுப்பூசி போட்டுக்கொள்ள டாக்டரிடம் ஆலோசனை கேட்டேன். நல்லது போட்டுக்கொள்ளுங்கள் என்றார். கோவிஷீல்டு முதல் டோஸ் போட்டு இருக்கிறேன். எனக்கு, 54 வயது ஆகிறது. தடுப்பூசி போட்ட பிறகு எந்த பிரச்னையும் இல்லை. தாராளமாக எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.


சித்ரா ரவீந்திரன், குடும்பத்தலைவி, கோவை: நான் ஒரு டோஸ் கோவிஷீல்டு போட்டு இருக்கிறேன். உடல்வலி, காய்ச்சல் வரும் என்று சொன்னார்கள் ஆனால் எனக்கு எதுவும் வரவில்லை. எப்போதும் போல் நன்றாக இருக்கிறேன். அடுத்த டோஸ் இன்னும் இரண்டு நாட்களில் போட போகிறேன். தடுப்பூசி பற்றி வரும் வாட்ஸ்அப் வதந்திகளை நம்ப வேண்டாம், தைரியமாக போட்டுக்கலாம். ஏற்கனவே பல கோடி பேர், தடுப்பூசி போட்டு நன்றாக உள்ளனர்.லதா சுந்தரம், நிறுவனர், அறம் அறக்கட்டளை, கோவை: எங்கள் வீட்டில் மூன்று பேர் தடுப்பூசி முதல் டோஸ் போட்டு இருக்கிறோம். இதுவரை எந்த பிரச்னையும் இல்லை. காய்ச்சல் வந்தால் போட்டுக்கொள்ள சொல்லி மாத்திரை கொடுத்தனர். எனக்கு எந்த அறிகுறியும் இல்லாததால் போட்டுக்கொள்ளவில்லை. தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்ல விஷயம். மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்லலிதா சுந்தரம், குடும்பத்தலைவி, கோவை: எனக்கு, 73 வயது ஆகிறது. ரத்த அழுத்த பிரச்னை இருக்கிறது. கோவிட்ஷீல்டு முதல் டோஸ் போட்டு இருக்கிறேன். எந்த பிரச்னையும் இல்லை. என் கணவருக்கு, 83 வயது. அவருக்கு எல்லா பிரச்னையும் இருக்கிறது. பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து இருக்கிறார். அவர் இப்போது இரண்டாவது டோஸ் போட போகிறார். தடுப்பூசி பற்றி பயமே வேண்டாம். இந்த தடுப்பூசிகளை கடவுள் கொடுத்த வரமாக நினைத்து கொண்டு, தைரியமாக போட்டுக்கொள்ளுங்கள்


ஆஷா தேவதாஸ், ரோட்டரி இன்னர்வீல் தலைவர், கோவை: நான் கோவிஷீல்டு இரண்டு டோஸ் போட்டு இருக்கிறேன். முதல் டோஸ் போடும்போது எந்த பிரச்னையும் இல்லை. இரண்டாவது டோஸ் போடும்போது, காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு இருந்தது. அது இரண்டு நாட்களில் சரியாகி விட்டது. தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. சிலர் பயப்படுகின்றனர். இதனால் எந்த பிரச்னையும் வாரது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X