தமிழக ஓய்வூதியர் 2,400 பேர் பரிதவிப்பு: கணக்கு டில்லிக்கு மாறுவதால் சிக்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
01:35

கோவை:அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற, 2,400 பேரின் ஓய்வூதிய கணக்குகளை, டில்லி அலுவலகத்துடன் இணைக்கும் முடிவு, ஓய்வூதியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அரசின் அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றி ஓய்வு பெற்ற, 2,400 பேர் தற்போது ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு தணிக்கைத்துறையின் சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகம் (பே அண்ட் அக்கவுன்ட்ஸ் ஆபீஸ்) வழியாக ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.இந்நிலையில், இம்மாதம் 1ம் தேதியன்று, 'தணிக்கைத்துறையின் சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகம் வழியாக இனி உங்களுக்கு ஓய்வூதியம் தரப்படமாட்டாது. நீங்கள் டில்லியில் இருக்கும் மத்திய சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகம் வழியாகவே இனி ஓய்வூதியம் பெற வேண்டும்' என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.'இதற்கு தேவையான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட ஓய்வூதியர், ஏப்.,30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என்றும் உத்தரவிட்டிருந்தனர்.இந்த உத்தரவு, ஓய்வூதியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 100க்கும் குறைவானவர்களே இதுவரை விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர்.'முதியோர் அலைக்கழிப்பு'அக்கவுன்ட்ஸ் எம்ப்ளாயீஸ் அசோசியேசன் நிறுவன தலைவர் நாராயணன் கூறியதாவது:கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஓய்வூதியர்களை வங்கிக்கு அலைக்கழிக்கும் வகையில் உத்தரவை பிறப்பித்தது தவறானது. ஓய்வூதியர்கள் பலர், கம்ப்யூட்டர், மொபைல் செயலி நிபுணத்துவம் இல்லாதவர்கள். அவர்களை பாதிக்கும் இந்த உத்தரவை வாபஸ் பெற அக்கவுன்டன்ட் ஜெனரல் உத்தரவிட வேண்டும்.தமிழகத்தில் இருக்கும் ஓய்வூதியர்கள் 2,400 பேரில், 80 வயது கடந்தவர்கள் மட்டும் 150 பேர் உள்ளனர். 750 பேர் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள். இவர்களுக்கு ஓய்வூதிய கணக்கு, டில்லி மத்திய சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகத்துடன் இணைக்கப்படும் பட்சத்தில், சந்தேகத்தை நிவர்த்தி செய்தல், அவசர உதவி கோருவது போன்றவை, ஓய்வூதியர்களுக்கு சாத்தியம் இல்லாததாகி விடும். மொழிப்பிரச்னையும் ஏற்படும்.அனைத்து தணிக்கைத்துறை ஓய்வூதியர்களுக்கும், பழைய வழிமுறைப்படியே, தொடர்ந்து ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற அனைவருக்கும் உடனுக்குடன் ஓய்வூதியம் வழங்கவும், அக்கவுன்டன்ட் ஜெனரல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு நாராயணன் கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X