4 எஸ்.ஐ.,கள் உட்பட 25 பேருக்கு கொரோனா | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
4 எஸ்.ஐ.,கள் உட்பட 25 பேருக்கு கொரோனா
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
01:35

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் காவலர் குடியிருப்புகளில் உள்ள, நான்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட தாலுகாவில், 25 பேருக்கு, கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் காவலர் குடியிருப்புகளிலும் சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதில் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு எஸ்.ஐ., காவலர்கள் குடியிருப்பில், மூன்று எஸ்.ஐ.,களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. காவலர் குடியிருப்புகளில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு, சளி மாதிரி எடுக்கப்பட்டது.காரமடை அருகே பொன்னம்மாள் கார்டனில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன், மருமகள் ஆகிய, நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில், நேற்று மொத்தமாக, 25 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது.இவர்கள் மேட்டுப்பாளையம் தனியார் மருத்துவமனை, கோவை அரசு மருத்துவமனை, சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X