தாக்குதல் நடத்திய எஸ்.ஐ.,: ஆர்.டி.ஓ., விசாரணை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
தாக்குதல் நடத்திய எஸ்.ஐ.,: ஆர்.டி.ஓ., விசாரணை
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
01:43

கோவை:-கோவையில் ஓட்டலில் சாப்பிட்ட பொதுமக்களை தாக்கிய எஸ்.ஐ., மீது ஆர்.டி.ஓ., விசாரணை நடக்கிறது.கோவை, காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்டில், மோகன்ராஜ் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த, 11ம் தேதி இரவு இந்த ஓட்டலுக்கு வந்த காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., முத்து, அங்கிருந்த ஊழியர்கள், சாப்பிட்டு கொண்டிருந்த மக்கள் மீது லத்தியால் சரமாரியாக தாக்கினார்.இதில் ஓசூரைச் சேர்ந்த பெண், கடை ஊழியர்கள் உள்ளிட்ட, நான்கு பேர் காயமடைந்தனர். இதுதொடர்பான சி.சி.,'டிவி' காட்சிகள் வைரலாகின.இச்சம்பவத்தை தொடர்ந்து எஸ்.ஐ., முத்து ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து அவரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார்.இந்த விவகாரம் தொடர்பாக, கோவை தெற்கு ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணையின் இறுதியில் எஸ்.ஐ., முத்து தாக்கியது நிரூபிக்கப்பட்டால், அவர் மீது வழக்கு பதிந்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X