'ரெம்டெசிவிர்' உயிர் காக்காது : மத்திய அரசு எச்சரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

20 ஏப்
2021
04:32
பதிவு செய்த நாள்
ஏப் 20,2021 04:30

புதுடில்லி :'ரெம்டெசிவிர் மருந்து, உயிர் காக்கும் மருந்து அல்ல என்பதால், அதை கொரோனா நோயாளிகளுக்கு அவசியமின்றி தரக் கூடாது' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.



கொரோனோ இரண்டா வது அலை வேகமாக பரவி வருவதால், பாதிக்கப் பட்டோருக்கு செலுத்தும், 'ரெம்டெசிவிர்' ஊசி மருந்திற்கான தேவை அதிகரித்துள்ளது. கள்ளச் சந்தை யில், அந்த மருந்தின் விலையும், தாறுமாறாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:மருத்துவமனையில், ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் அவசர கால பயன்பாட்டிற்கு மட்டுமே ரெம்டெசிவிர் ஊசி மருந்துக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது.



அது ஒரு சோதனைக்கான ஆய்வு மருந்து தானே தவிர, உயிர் காக்கும் மருந்து அல்ல. அந்த மருந்தால், இறப்பு விகிதம் குறைந்திருப்பதாக ஆய்வுகள் கூறவில்லை. எனவே, மருத்துவமனையில், ஆக்சிஜன் உதவியுடன் இருக்கும் நோயாளிகளுக்கு தேவைப்பட்டால் மட்டுமே, ரெம்டெசிவிர் வழங்கலாம். வீட்டுச் சூழலில் இருப்போர் கண்டிப்பாக போட்டுக் கொள்ளக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



இதற்கிடையே, டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா, ''ரெம்டெசிவிர், இறப்பை தடுக்கும், மாய மருந்து அல்ல. ''கொரோனா வைரசை எதிர்க்கும் திறனுள்ள மருந்து இல்லாததால், அது பயன்படுத்தப்படுகிறது. அதை, சாதாரண நோய் எதிர்ப்பு மருந்தாக உபயோகிக்கக் கூடாது,'' என, தெரிவித்துள்ளார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-ஏப்-202112:57:37 IST Report Abuse
Natarajan Ramanathan இந்த மருந்தையும் போலியாக தயாரித்து புழக்கத்தில் விட்ட மும்பை தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் கைதாகி உள்ளார்....
Rate this:
Cancel
S.PALANISAMY - COIMBATORE,இந்தியா
20-ஏப்-202111:29:32 IST Report Abuse
S.PALANISAMY if so, then why Former CM of Maharashtra Fadnavis has reportedly ordered 4.5 cr Remdesivir?
Rate this:
Cancel
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
20-ஏப்-202108:54:14 IST Report Abuse
JAYACHANDRAN RAMAKRISHNAN எவ்வளவு சொன்னாலும் சில மூடர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சில கீழ்த்தரமான அரசியல்வாதிகள் இதை வைத்து ஆதாயம் தேட முயற்சிப்பர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X