வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிய வடலுார் பஸ் நிறுத்தம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
04:35

வடலுார்; வடலுாரில் பஸ் நிறுத்தம் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி, சாலையில் பஸ்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.கடலுார் மாவட்டத்தில் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக வடலுார் நகரம் உள்ளது. சேலம், விருத்தாசலம், திருச்சி, காட்டுமன்னார்கோவில், கும்பகோணம் ஆகிய நகரங்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் வடலுார் வழியாகச் செல்கிறது. இதனால், வடலுார் நான்கு முனை சந்திப்பு சாலை எப்போதும் பிசியாக காணப்படும்.வடலுார் பஸ் நிலையம் எதிரே பெரிய மேற்கூரையுடன் கூடிய பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு, கடலுாரில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் உள்ளே சென்று பயணிகளை இறக்கி,ஏற்றிச் செல்லும்.ஆனால், சில ஆண்டுகளாக இந்த பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் உள்ளே செல்லாமல் சாலையில் நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மேலும் பஸ்கள் நிறுத்தத்திற்குள் வராததால் அந்த இடத்தில் அதிக அளவில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு டூ வீலர் ஸ்டாண்ட் போன்று மாறி விட்டது. எனவே வடலுார் போக்குவரத்து காவல்துறை போலீசார் பஸ் நிறுத்தத்திற்குள் பயணிகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X