முன்விரோத தகராறு நால்வர் மீது வழக்கு | கடலூர் செய்திகள் | Dinamalar
முன்விரோத தகராறு நால்வர் மீது வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
04:39

விருத்தாசலம்; முன்விரோத தகராறில் ஒருவரைத் தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் புதிய காலனியைச் சேர்ந்தவர்சுந்தரமூர்த்தி, 40; பழைய காலனியைச் சேர்ந்தவர் அசோக்குமார், 23; இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. கடந்த 15ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.இதில், சுந்தரமூர்த்தியை, அசோக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆர்த்திகுமார், அருண்ராஜ், அழகுராஜ் ஆகியோர் தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர்.புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் அசோக்குமார் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X