சுபநிகழ்ச்சி, திருவிழாக்களில் 50 சதவீத மக்கள்கலந்து கொள்ள அனுமதி வழங்க கோரி மனு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
04:45

கள்ளக்குறிச்சி; தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள், 50 சதவீத மக்களுடன் திருமணம், சமூக நிகழ்ச்சி, திருவிழாக்கள் நடத்த அனுமதி அளிக்குமாறு கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் நடராஜன் தலைமையில் 15க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துளசள மனு: திருமணம், காதுகுத்து உள்ளிட்ட விசேஷங்கள், துக்க நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள் போன்றவற்றில் ஒலி, ஒளி, ஜெனரேட்டர், பர்னிச்சர், ஷாமியானா பந்தல், மேடை ஆகியவற்றை அமைப்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பி தொழில் நடத்தி வருகிறோம்.பலர் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். இந்த தொழிலினை நம்பி, பலரது குடும்பங்கள் உள்ளது. கடந்தாண்டு பொது முடக்கத்தால் தொழில் நடத்த முடியாமல் பாதிக்கப்பட்டோம்.இந்நிலையில், தற்போது திருவிழாக்கள், சுபநிகழ்ச்சிகளுக்கு அளித்துள்ள கட்டுப்பாடுகளால் மீண்டும் வருவாயின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர் மற்றும் வணிகவளாகங்களை போல, பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி 50 சதவீத மக்கள், பார்வையாளர்களை கொண்டு திருமணம், சமூகநிகழ்ச்சி, திருவிழாக்கள், சர்ச், மசூதி மற்றும் தனியார் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X