இரவு நேர ஊரடங்கு புதுச்சேரியில் இரவு 10:00 - காலை 5:00 மணி வரை... ஓட்டல்களில் சாப்பிடுவதற்கு கட்டுப்பாடு விதிப்பு --------------- புதுச்சேரியில் ஊரடங்கு இரவு 10:00 மணி முதல், காலை 5:00 மணி வரை... ஓட்டல்களுக்கு கட்டுப்பாடு ; கடற்கரை மூடல்  | செய்திகள் | Dinamalar
இரவு நேர ஊரடங்கு புதுச்சேரியில் இரவு 10:00 - காலை 5:00 மணி வரை... ஓட்டல்களில் சாப்பிடுவதற்கு கட்டுப்பாடு விதிப்பு --------------- புதுச்சேரியில் ஊரடங்கு இரவு 10:00 மணி முதல், காலை 5:00 மணி வரை... ஓட்டல்களுக்கு கட்டுப்பாடு ; கடற்கரை மூடல் 
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
05:06

புதுச்சேரி; கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக, புதுச்சேரியில் இரவு 10:00 மணி முதல், காலை 5:00 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு இன்று அமலுக்கு வருகிறது.புதுச்சேரியில் அதிகரித்துள்ள கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக உள்ளதால், மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
இந்நிலையில், மாநிலத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மேலும் கடுமையாக அமல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ராஜ்நிவாசில் நேற்று மாலை நடந்தது. கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தலைமையில் நடந்த கூட்டத்தில், கவர்னரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, மகேஸ்வரி, தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், வளர்ச்சி ஆணையர் சுந்தர வடிவேலு, சுகாதாரத் துறை செயலர் அருண், உள்ளாட்சித் துறை செயலர் வல்லவன், ஏ.டி.ஜி.பி., ஆனந்த மோகன், புதுச்சேரி கலெக்டர் பூர்வா கார்க் கலந்து கொண்டனர். காரைக்கால் கலெக்டர் அர்ஜூன் சர்மா, மாகே, ஏனாம் மண்டல அதிகாரிகள் அமன் சர்மா, சிவராஜ் மீனா உள்ளிட்டோர் 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக பங்கேற்றனர். கூட்டத்தில் எடுத்த முடிவுகள் குறித்து கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் அளித்த பேட்டி:புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலை தடுக்க, அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 20ம் தேதி(இன்று) முதல் மேலும் பல கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரியில் ஏற்கனவே இரவு 12:00 மணி முதல், காலை 5:00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.20ம் தேதியில் (இன்று) இருந்து இரவு நேர ஊரடங்கு இரவு 10:00 மணி முதல், காலை 5:00 மணி வரை அமலில் இருக்கும். எனவே, இரவு 10:00 மணிக்குள் பொதுமக்கள் வீட்டிற்கு செல்லும் வகையில் கடைகள் மூடப்படுவதை வியாபாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.கடற்கரை மூடல்கடற்கரை சாலை காலை 5:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். மற்ற நேரங்களில் மூடப்பட்டிருக்கும். ஓட்டல்களில் இரவு 8:00 மணி வரை மட்டுமே அமர்ந்து சாப்பிடலாம். 8 மணிக்கு பின், பார்சல் மட்டுமே வழங்கப்படும்.வழிபாடு தலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மத தலைவர்களுடன் அதிகாரிகள் நடத்தும் பேச்சுவார்த்தைக்கு பின், வழிபாடு தலங்களுக்கான நேரம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து முடிவு செய்யப்படும்.கண்காணிப்பு தீவிரம்அடையாளம் கண்டறியப்பட்ட சிறிய அளவிலான கட்டுப்பாட்டு மண்டலங்களை மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என பிரித்து கொரோனா நடைமுறைகள் தீவிரப்படுத்தப்படும். வட்டார அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு, கொரோனா விதிகள் நடைமுறைப்படுத்தப்படும்.வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை ஆஷா பணியாளர்கள் நேரில் கண்காணித்து வருகின்றனர். புதுச்சேரியில் 20 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் அறிவித்து , முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மருந்து கையிருப்புமத்திய அரசிடம் இருந்து புதுச்சேரிக்கு தேவையான அவசர கால மருந்துகள் அனைத்தும் வாங்கப்பட்டு விட்டன.
அனைத்து சுகாதார நிலையங்களிலும் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகிறது. புதுச்சேரியில் 2,425 படுக்கைகளில், 1,398 படுக்கைகள் காலியாக உள்ளன. மேலும், ஆக்ஸிஜனுடன் உள்ள 970 படுக்கைகளில், 625 படுக்கைகளும், செயற்கை சுவாச வசதியுடன் 135 படுக்கைகளில் 28 படுக்கைகளும் காலியாக உள்ளன. வீடுகளில் இது வரை 2,500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 'மாஸ்க்' கட்டாயம் தனியார் மருத்துவமனைக்கு தேவையான அவசர கால மருந்துகளையும் அரசே இலவசமாக வழங்கி வருகிறது. வார இறுதி நாட்கள் ஊரடங்கு குறித்து முடிவு செய்யப்படவில்லை.முக்கியமாக, பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். இவ்வாறு கூறினார். திருமண விழாவில் 100 பேருக்கு அனுமதிகொரோனா தடுப்பு விதிமுறைகள் புதுச்சேரியில் இன்று முதல் கடுமையாக்கப்பட்டுள்ளன. திருமண விழாக்கள் நடத்த தடையில்லை. ஆனால், 100 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். இறுதி சடங்குகளில் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X