கள்ளக்காதலிக்காக செயின் பறிப்பு: வாலிபர் கூட்டாளிகளுடன் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
05:41

வில்லிவாக்கம்- கள்ளக்காதலிக்காக, செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து, 15 சவரன் நகை, ஐந்து மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தனிப்படைசென்னை, வில்லிவாக்கம் சுற்று வட்டாரப் பகுதியில், சாலையில் தனியே நடந்து செல்வோரிடம், செயின் பறிப்பு, மொபைல் பறிப்புசம்பவங்கள், அடிக்கடி அரங்கேறின.இது குறித்து, ஏராளமான புகார்கள் வந்ததை தொடர்ந்து, செயின் பறிப்பில் ஈடுபடுவோரை பிடிக்க, வில்லிவாக்கம் போலீசார் தனிப்படை அமைத்தனர்.முன்னதாக, தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த பகுதியில், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தனர்.இதில், மூன்று பேர் கும்பல், பல பகுதிகளில் செயின் பறித்தது தெரியவந்தது.தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த சங்கர், 25, மனோஜ், 25, ஆகிய இருவரும், மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த வசந்த், 35, என்பவரும், செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.நேற்று மூவரையும் கைது செய்த போலீசார், தீவிரமாக விசாரித்தனர்.பறிமுதல்இதில், வசந்த் என்பவர் 'டாட்டூ' குத்துவதில் கைதேர்ந்தவர். கொரோனா காலத்தில், போதுமான வருமானம் இல்லாததால் அவரது கள்ளக்காதலி மங்களாதேவி, 40, என்பவருக்கு செலவு செய்ய, போதிய பணம் இல்லாததால் செயின் பறிப்பு, மொபைல் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட துவங்கினார்.சில மாதங்களுக்கு முன், கொருக்குப்பேட்டை போலீசார் வசந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின் வெளியே வந்த பிறகும், மீண்டும் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.தொடர்ந்து வசந்த் கொடுத்த தகவலின் அடிப்படையில், அவரது கள்ளக்காதலியையும் போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, 15 சவரன் நகை, 5 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X