குறைகளை கூறுவோம்... தீர்வு காண்போம்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
06:24

நீர் பிடிப்பு பகுதியில் குப்பை



ராஜபாளையம் தென்காசி மெயின் ரோடு கடம்பன் குளம் கண்மாயில் குப்பை கொட்டப்படுவதால் கண்மாய் நீர்பிடிப்பு பகுதிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க வேண்டும்.நடராஜ், ராஜபாளையம்.



பாதுகாப்பு வேலி அமைக்கப்படும்



தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிகள் முடிந்தவுடன் கண்மாய் கரை ஓரப்பகுதிகளில் பாதுகாப்பு வேலி அமைத்து முறைப்படுத்தப்படும்.சந்திரமோகன், உதவி செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை.



சேதமடைந்த துணை சுகாதார நிலையம்



நரிக்குடி நாலுார் துணை சுகாதார நிலையம் சேதமடைந்துள்ளது. இங்கு வந்து செல்லும் நோயாளிகள் உறவினர்கள் அச்சப்படுகின்றனர். உடனடியாக சீரமைக்க வேண்டும். ராஜமோகன், நரிக்குடி.



நடவடிக்கை எடுக்கப்படும்



சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,பரமேஸ்வரி, ஊராட்சி தலைவர்.



ரோட்டில் கழிவுநீர்



மல்லாங்கிணரில் கோவில்பட்டி செல்லும் வழியில் கழிவுநீர் தேங்கி அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். தேங்கிய கழிவுநீரை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.பால்ராஜ், மல்லாங்கிணர்.



சரி செய்யப்படும்



சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.முருகன், செயல் அலுவலர்,



கண்மாயில் குப்பை



சிவகாசி பள்ளப்பட்டி ஊராட்சி முத்துராமலிங்கபுரம் காலனி கண்மாய் பகுதியில் குப்பை கொட்டப்படுகிறது. தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுந்தர், சிவகாசி.



தடுக்க நடவடிக்கை



கண்மாயில் குப்பை கொட்டுவதை நடவடிக்கை எடுக்கப்படும்.உசிலை செல்வம், ஊராட்சி தலைவர், பள்ளப்பட்டி.



தெருவிளக்குகள் எரியவில்லை



சாத்துார் நான்கு வழிச்சாலை படந்தால் ஜங்ஷன் சந்திப்பு உயர்மின் கோபுர விளக்கும் சர்வீஸ் ரோட்டில் உள்ள தெரு விளக்குகளும் அடிக்கடி பழுதாகி விடுகிறது. வெளியூர் செல்வதற்காக இங்கு காத்திருக்கும் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.முத்துராஜ், சாத்துார்.



நடவடிக்கை எடுக்கப்படும்



அனைத்து விளக்குகளையும் சரி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். ராஜமாணிக்கம், நகராட்சி கமிஷனர், சாத்துார்.



ரோட்டை சீரமைக்க வேண்டும்



சிவகாசி பழனியாண்டவர்புரம் காலனியில் ரோடு சேதமடைந்து வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.முத்துலெட்சுமி, சிவகாசி.



சீரமைக்கப்படும்



ரோடு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.பார்த்தசாரதி, நகராட்சி கமிஷனர்,சிவகாசி.



குடியிருப்புக்குள் புகும் நீர்



ஸ்ரீவில்லிபுத்துார் ஆத்துக்கடை தெரு பழைய மதுரை ரோடு அருகே செல்லும் நீர்வரத்து ஓடையில் நகராட்சி அனுமதியின்றி பாலம் கட்டப்பட்டுள்ளதால் நீர் செல்ல வழியில்லாமல், குடியிருப்புகளுக்குள் புகுந்து சிரமத்தை ஏற்படுத்துகிறது.தனசேகர், ஸ்ரீவில்லிபுத்துார்.



கூடுதல் கண்காணிப்பு



மழைக்காலங்களில் கழிவுகள் சேரும் போது குடியிருப்புகளுக்கு உள் நீர் புகுந்து விடுகிறது. இதை அகற்ற துரிதமாக பணிகள் நடக்கிறது. இனி கூடுதல் கண்காணிப்பு செய்யப்படும். பழனிக்குரு, நகராட்சி சுகாதார ஆய்வாளர்,ஸ்ரீவி.,



பஸ் வசதி இல்லை



வத்திராயிருப்பு சுந்தரபாண்டியத்தில் இருந்து ராஜபாளையம் செல்வதற்கு பஸ் வசதி இல்லை. ஸ்ரீவில்லிபுத்துார் வந்து தான் பஸ் ஏற வேண்டி உள்ளது. இதனால் மிகுந்த சிரமத்தை சந்திக்கிறோம்.எஸ்.குருநமச்சிவாயம், சுந்தரபாண்டியம்.



தினசரி இயக்கப்படுகிறது



ராஜபாளையத்தில் இருந்து சுந்தரபாண்டியம் செல்லும் பஸ் தினசரி இயங்குகிறது. ரவிச்சந்திரன், கிளைமேலாளர், போக்குவரத்து கழகம், ஸ்ரீவில்லிபுத்துார்.



சேதமடைந்த ரேஷன் கடை



சாத்துார் நம்பிராஜபுரத்தில் அமீர்பாளையம், போக்குவரத்து நகர் மக்களுக்காக செயல்பட்டு வரும் ரேஷன் கடை கட்டடம் பழுதான நிலையில் உள்ளது. லேசான மழை பெய்தாலும் கடைக்குள் தண்ணீர் புகுந்து விடுவதால் பொருட்கள் சேதமடைகின்றன.துரைராஜ், அமீர்பாளையம்.



நடவடிக்கை எடுக்கப்படும்



பி.டி.ஓ., கவனத்திற்கு கொண்டு சென்று ரேஷன் கடை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.அண்ணாமலை, ஊராட்சி தலைவர், அயன் சத்திரப்ட்டி.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X