பணிச்சுமையால் கண்ணாடி அலமாரியை கையால் அடித்த பெண் போலீஸ் காயம் | திருவண்ணாமலை செய்திகள் | Dinamalar
பணிச்சுமையால் கண்ணாடி அலமாரியை கையால் அடித்த பெண் போலீஸ் காயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
12:59

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பணிச்சுமையால், ஆயுதப்படை அலுவலகத்தில் இருந்த கண்ணாடி அலமாரியை கையால் அடித்த பெண் போலீஸ் படுகாயமடைந்தார். திருவண்ணாமலை ஆயுதப்படை பிரிவில் மணிமேகலை, 29, என்பவர் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த சில நாட்களாக அதிக பணிச்சுமை காரணமாக, மன உளைச்சலில் இருந்துள்ளார். அவருக்கு, நேற்று முன்தினம் மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மனவேதனையடைந்த அவர், அங்கிருந்த கண்ணாடி அலமாரியை கையால் ஓங்கி அடித்துள்ளார். இதில், கையில் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது கையில் ஆறு தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் திருவண்ணாமலை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X