ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் வேலூர் ஜி.ஹெச்.,ல் 7 பேர் பலி: கலெக்டர் மறுப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
13:01

வேலூர்: ஆக்சிஜன் தட்டுப்பாட்டால், வேலூர் அரசு மருத்துவமனையில், ஏழு பேர் இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதை கலெக்டர் மறுத்துள்ளார்.


வேலூர் மாவட்டத்தில், கொரோனா தொற்றில் தினமும், 100 முதல், 150 பேர் வரை, வேலூர் அடுக்கும்பாறையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று காலை முதல், அடுத்தடுத்து ஏழு பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தனர். உடல்கள் அவசரகதியில் ஒப்படைக்கப்பட்டதாக, உறவினர்கள் குற்றம் சாட்டினர். மேலும், நோயாளிகள் பலரை, வேலூர் அரசு பெண்லண்ட், வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைகளுக்கு இடமாற்றம் செய்வதற்கான ஏற்பாடு நடந்து வருவதாகவும் தகவல் வெளியானதால், பரபரப்பு ஏற்பட்டது.


இதையடுத்து மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், நேரில் சென்று விசாரணை நடத்திய பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ஆக்சிஜன் பிரிவில், 121 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதயநோய் போன்ற பல்வேறு காரணங்களால், ஏழு பேர் இறந்துள்ளனர். ஆக்சிஜன் பற்றாக்குறை, கொரோனா நோயாளிகள் இறந்துள்ளதாக வெளியான செய்தி தவறானது. கொரோனா நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்படவில்லை. வழக்கமான முறையில்தான் ஆக்சிஜன் பைப் லைன் பராமரிப்பு பணி நடந்துள்ளது. அதில் பிரச்னையில்லை. இவ்வாறு, அவர் கூறினார். மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் மணிவண்ணன் கூறும்போது, ''ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்கவில்லை. கொரோனா தொற்றிலிருந்து அவர்கள் மீண்டு விட்டனர். இதயநோய் போன்ற பிரச்னைகளால் இறந்திருக்கலாம்,'' என்றார்.


இதுகுறித்து ஊழியர்கள் சிலர் கூறியதாவது: வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஐ.சி.யு., பிரிவில், 145 மற்றும் ஆக்சிஜன் வசதியில், 360 படுக்கைகள் உள்ளன. இவற்றுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு கிடையாது. ஆனால், நேற்று ஆக்சிஜன் சிலிண்டர்களில் இருந்து கொரோனா வார்டு, சிறப்பு வார்டுகளுக்கு செல்லும் பைப் லைன் ஐஸ்போல உறைந்து விட்டது. இதனால் சிறிது நேரம் ஆக்சிஜன் செல்லவில்லை. தொழில்நுட்ப கோளாறுதான் காரணம். மேலும் கடும் வெயிலால் சிலிண்டர்களில் நிறைய இடங்களில் கசிவு ஏற்பட்டு ஆக்சிஜன் வெளியேறி விட்டது. இப்பிரச்னையை கண்டுபிடித்து சரி செய்வதற்குள், ஏழு பேர் பலியாகி விட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


 

Advertisement
மேலும் வேலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X